சுவிஸில் வதியும் சுதா அவர்களது பிறந்தநாளில், “M.F” ஊடாக “கற்றல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்”.. (படங்கள் & வீடியோ)
சுவிஸில் வதியும் சுதா அவர்களது பிறந்தநாளில், “M.F” ஊடாக “கற்றல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல்”.. (படங்கள் & வீடியோ)
#############################
“ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதை தனது பிறந்தநாளில் நிரூபித்துள்ளார், சுவிஸில் இன்றைய நாளில் பிறந்தநாளைக் கொண்டாடும் சுதா என எல்லோராலும் அழைக்கப்படும் வேலணையைச் சேர்ந்த சீவரத்தினம் சுதாகரன்.
இவர் கடந்த பல வருடங்களாக தமது குடும்பத்தின் எந்த நிகழ்வானாலும், அதனை முன்னிட்டு இவ்வாறான சமூகப்பணிகளை சுதா அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து செய்து வருவது சிறப்பான விடயமாகும்.
அந்த வகையிலே சுதாகரன் அவர்களுடைய பிறந்தநாளில் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை எதிர் நோக்கும் வவுனியா மாவட்டத்தில் உள்ள தூர இடத்து கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கும்; தனித்தும், பராமரிப்பின்றி நோய்களோடு மிகுதி காலத்தைக் கழிக்கும் வயோதிபர்களுக்கும், கணவரை இழந்த தாய்மார்களுக்கும், அன்றாட வருமானத்தை இழந்த குடும்பங்களுக்குமான கற்றல் மற்றும் உலருணவுப் மொதிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக வழங்கி வைத்தார்.
இறுதி யுத்தத்தில் கணவரை இழந்து தனது இரண்டு பிள்ளைகளோடு ஆதரவின்றி வாழும் தாயொருவர், தனது பிள்ளைகளை காப்பாற்ற வீதிவீதியாக ஊதுபத்தி விற்பனை செய்து வாழும் வவுனியா நெளுக்குளத்தில் வசிக்கும் தாயொருவர் சுதா அவர்களின் பிறந்த நாளில் பெற்றுக் கொண்ட உலருணவுப் பொதியை பெற்றுக் கொண்ட பின் “தந்தையின் அன்பின் திருப்தியால், பசியோடு காத்திருக்கும் தனது பிள்ளைகளுக்கு வயிறார சாப்பாடு தந்த சுதாவுக்கு கைகூப்பி நன்றி” கூறினார்.
இவ்வாறான தேவையுடைய குடும்பங்களை இனங்கண்டே “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” பயணிக்கிறது. குறிப்பாக வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள புளியங்குளம் முத்துமாரி அம்மன் நகர் கிராமத்திலிருந்து அன்றாட சீவியத்திற்கு சிரமப்படும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களை அழைத்து வந்து உதவி பெற வைத்த சமுர்த்தி உத்தியோகத்தரும், சமூக ஆர்வலருமான திருமதி சர்மிளா அவர்களுக்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன் சுவிஸில் வாழும் மேற்படி வேலணை சுதா அவர்களது நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட உதவிகளை, வவுனியா வடக்கு புளியங்குளம் மற்றும் கனகராயன் குளம் வைத்தியசாலைக்கு பொறுப்பான “வைத்திய கலாநிதி திரு.மதிதரன்” அவர்களும், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினரும், இளம் அரசியல்வாதியுமான, செந்தில்நான் நற்பணி மன்றத்தின் தலைவர் “திரு.செந்தில்நாதன் மயூரன்” அவர்களும் இனைந்து மாணவர்களுக்கும், பெரியோர்களுக்கும் கற்றல் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தனர்.
மேற்படி இருவருக்கும் தனது பெருமைமிகு நன்றியினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” தெரிவித்துக் கொள்கிறது. மேற்படி நிகழ்வை “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” பிரதம ஆலோசகர்களில் ஒருவரான, திரு.மாணிக்கம் ஜெகன் அவர்கள் முழுமையான ஏற்பாடுகளை செய்து வழிநடத்தி இருந்தார்.
மீண்டும் ஒருமுறை சுவிஸ் சுதா அவர்கள் தேக ஆரோக்கியத்துடனும், செல்வச் செழிப்புடனும் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயை வேண்டுவதோடு, உதவி பெற்ற மக்கள் சார்பாக நன்றியினையும், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரித்துக் கொள்கிறோம்..
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
31.01.2021
“கைமாறு செய்ய வேண்டாம், சிறப்பான கல்வி எழுச்சியே போதும்”.. – “M.F” அலுவகத்தில் “செ.மயூரன்” (படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1