கனடா தோழர் கோபுவின்நிதிப் பங்களிப்பில், ஓலைக் குடிசை வீட்டிற்கு “M.F” ஊடாக கூரைத் தகரங்கள் வழங்கல்.. (படங்கள் & வீடியோ)
கனடா தோழர் கோபுவின் நிதிப் பங்களிப்பில், ஓலைக் குடிசை வீட்டிற்கு “M.F” ஊடாக கூரைத் தகரங்கள் வழங்கல்.. (படங்கள் & வீடியோ)
ஓலைக் குடிசை வீட்டிற்கு கூரைத் தகரங்கள் வழங்கி வைப்பு..
#########################
வவுனியா நெளுக்குளம் சிவபுரத்தில் வயோதிபத் தம்பதிகள் வாழும் ஓலைக் குடிசைக்கு கூரைத் தகரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சென்ற கிழமை லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அறங்காவல் தலைவரும், சமூகத் தொண்டருமான கண்ணன் என அழைக்கப்படும் கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் திருமணநாள் உதவியாக வயோதிபக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்ட போது, அதில் ஒருவரான வவுனியா சிவபுரத்தில் வசிக்கும் தாயொருவர் தமது வாழ்விடத்தின் நிலையினைக் கூறி கூரைத் தகரங்கள் தந்துதவுமாறு வேண்டுகோள் விடுத்ததை காணொலி மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பிரதம ஆலோசகர்களில் ஒருவரான திரு.சுவிஸ் ரஞ்சன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்தக் குடும்பத்தின் தலைவர் சவூதி நாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்ற நிலையில் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு ஒருவருடமாக மருத்துவ சிகிச்சை பெற்று இப்போது தான் ஓரளவு நடமாடும் நிலைக்கு வந்துள்ளார். இதுவும் இவர்கள் பொருளாதார ரீதியில் பின்னடைவு ஏற்படக் காரணமாயிற்று.
இவர்களின் கோரிக்கையை சுவிஸ் ரஞ்சன் அவர்கள், தனது வட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்திருந்த (ஒரிரு) சில நிமிடங்களில் கனடாவில் வசிக்கும் புளொட் தோழர் கோபு என அழைக்கப்படும் ஸ்ரீ அவர்கள் தனது பிறந்தநாள் இன்று (19.02.2021) வருவதாகவும், தான் அந்த கொண்டாட்டத்தை நிறுத்தி அந்தப் பணத்தை கூரைத்தகரம் கேட்ட குடும்பத்திற்கு “பெரியையா” என அழைக்கப்படும் தோழர் உமா மகேஸ்வரன் அவர்களது நேற்றைய பிறந்தநாள் பரிசாக அந்தக் குடும்பத்திற்கு “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கும்படி அதன் பிரதம ஆலோசகர் திரு சுவிஸ் ரஞ்சன் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
உடனடியாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினர் குறித்த கூரைத்தகரம் கேட்ட குடும்பத்தை அணுகி கூரைத்தகரம் போடுவதற்கான அனைத்து வசதிகளையும் அங்கேயே நின்று மேற்பார்வை செய்து அவர்கள் விரும்பியவாறு வீட்டை திருத்தியமைத்து கொடுத்தார்கள். கூரை அகற்றப்பட்டு புதிதாக தடிகள் மாற்றப்பட்டு கூரை போடுவதற்குரியவாறு குடிசை திருத்தப்பட்டு கூரைத் தகரங்கள் வழங்கப்பட்டது.
சிறப்பாக இன்றைய சிறப்பு அழைப்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினரும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான பாபு என அழைக்கப்படும் பூபாலசிங்கம் சந்திரபத்மன் அவர்கள் கலந்து கொண்டு கூரைத் தகரங்கள் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் அந்தக் குடும்பங்களின் வாழ்வாதார நிலையைக் கேட்டறிந்து கொண்டு அவர்களுக்கான கோழி வளர்ப்புக்கு தன்னாலான உதவியினை வழங்க உறுதியளித்தார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில் “இவ்வாறான அடிப்படை பிரச்சினைகளை கிராமங்களில் இனங்கண்டு அவற்றை நீக்குவதற்கான முயற்சியை நடவடிக்கையினை நிறைவேற்றுவது சாதாரண விடயமல்ல. இதற்கு நீண்டநாள் தேவைப்படும். ஆனால் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” குறுகிய நாட்களில் இதனை சிறப்பாக நிறைவேற்றி, ஏழைகளின் இதயங்களின் இல்லத்தில் விளக்கேற்றி நம்பிக்கையை விதைத்துள்ளார்கள்”.
“அவர்கள் அனைவருக்கும் குறிப்பாக நிதி வழங்கிய கோபு என்ற ஸ்ரீ அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவதோடு, எனது வட்டார மக்கள் சார்பாக நன்றியையும், இதனை கடந்த நான்கைந்து நாடகளாக நேரில் வந்து முழுமையான சரீர உதவிகளை புரிந்து ஒழுங்குபடுத்திய திரு.மாணிக்கம்ஜெகன் மற்றும் அவரின் குழுவினருக்கும், இதுக்குரிய முழு ஆலோசனைகளையும் உடனுக்குடன் வழங்கி நெறிப்படுத்திய சுவிஸ்ரஞ்சன் உட்பட “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” குழுவினருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.
முடிவாக தமது சந்தோசத்தை இளநீர் வெட்டித் தந்து அந்த ஏழைக் குடும்பம் மகிழ்ந்தது. ஒரு நிறைவான பணி செய்த திருப்தியுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றப் பணிக் குழுவினர் அலுவலம் திரும்பினர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
19.02.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1