புங்குடுதீவு உறவுகளின் மகனின் பிறந்த நாளில் புதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
கனடா வாழ் புங்குடுதீவு உறவுகளின் மகனின் பிறந்த நாளில் புதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
புங்குடுதீவை பூர்வீகமாகக் கொண்ட கனடாவில் வசிக்கும் வர்த்தகரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தாயகப் பிரதேசங்களில் பல்வேறு சமுகப் பணிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக செய்து வருகின்றனர்.
தமது பெயரை குறிப்பிட விரும்பாத கனடா வாழ். உறவுகளான இவர்கள் கடந்த வாரத்தில் தமது மகளின் பிறந்தநாள் பரிசாகவும், வர்த்தகரின் துணைவியாரின் பிறந்த நாள் பரிசாகவும், தமது திருமணநாளை முன்னிட்டும் பல்வேறு வாழ்வாதார உதவிகளையும், “கல்விக்கு கரம் கொடுப்போம்” எனும் திடடத்தின் கீழ் துவிச்சக்கர வண்டி முதல், பல மாணவ, மாணவிகளுக்கும் கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர் என்பது நீங்கள் அறிந்ததே.
இன்று தமது மகனின் பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரத்தில் யாருமற்ற நிலையில் வாழும் தாய்மார்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியதைத் தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை அண்டிய கிராமங்களில் வாழும் கற்றல் வசதிகள் குறைந்த நாளாந்த கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் பெயர் சொல்ல விரும்பாத கனடாவாழ் வர்த்தகரின் மகன் பிறந்த நாளான இன்று வழங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள் வாகன வசதி குறைந்துள்ள வேளையில் குறித்த நேரத்தில் நடந்து வந்து கற்றல் உபகரணங்கள வாங்கிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
புதுக்குடியிருப்பு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் பெற்றதோடு மாத்திரமல்லாது இன்று பிறந்தநாள் காணும் அன்பு உறவுக்கும் “இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும்” தெரிவித்தனர்.
அத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்த்துக்களையும் கனடா வாழ் பிறந்தநாள் கொண்டாடும் உறவுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம். மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்” புகையிரத நிலைய வீதி, வவுனியா.
06.03.2021