அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக “உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்)
அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக “உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (வீடியோ படங்கள்)
##################################
தனிமைப்படுத்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர் குடும்பங்களுக்கும், மற்றும் மிகவும் கஷ்ரமான நிலையில் உள்ள தாய்மார்களுக்கும் அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக அவரது குடும்பத்தின் நிதி பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ் நாட்டில் வசிக்கும் குமாரண்ணை என அழைக்கப்படும் மக்கள் சேவகரும், சமய சமூகத் தொண்டரும், புளொட் சுவிஸ் கிளை உறுப்பினரும், சூரிச் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான விஜயநாதன் இரட்ணகுமார் அவர்களது தந்தையாரான அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களது ஐந்தாமாண்டு நினைவாக அன்னாரது குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் நேற்றையதினம் வவுனியா ஆச்சிபுரத்தில் நாளாந்த கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலைநேர கற்பித்தலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யாழ்.உடுப்பிட்டி மற்றும் சுவிஸிலாந்து நாட்டில் வசித்தவரும் சுவிஸில் அமரத்தவம் அடைந்தவருமான “இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார்” அமரர்.வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின், ஐந்தாமாண்டு நினைவாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டது.
சுவிசில் பலருக்கு வழிகாட்டியாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும் இருக்கும் குமாரண்ணை என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயநாதன் ரெட்ணகுமார் அவர்களது தந்தையாரின் வருடாந்த ஆண்டு நினைவாக தமிழர் தாயகப் பகுதியெங்கும் பல்வேறு சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்றையதினம் காலை வவுனியாவில் மிகவும் பின்தங்கிய கிராமமான ஆச்சிபுரம் கிராமத்தில், எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சார்பில் குறித்த கிராமத்தின் இணைப்பாளரான செயல்படும் திருமதி மைதிலி அவர்களின் ஏற்பாட்டில் மாலை நேரத்து கற்றலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு தந்தை மற்றும் பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு அந்தப் பிள்ளைகளைப் பாதுகாக்கும் உறவினர்கள் பராமரிப்பாளர்கள் கற்றல் உபகரணங்களை பெற்றுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர் குடும்பங்களுக்கும், மற்றும் மிகவும் கஷ்ரமான நிலையில் உள்ள தாய்மார்களுக்கும் அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக அவரது குடும்பத்தின் நிதி பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஏற்பாட்டில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மீண்டும் கொரோனா வவுனியா மாவட்டத்தில் வேகமாக பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் இந்நோய் வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் கிராமங்களில் ஆங்காங்கே குடும்பம் குடும்பங்களாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. அந்தவகையில் வவுனியா நகர் பிரதேசமான குருமண்காடு மற்றும் சுந்தரபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையில் தொழில் செய்த தொழிலாளர் குடும்பங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டு சில நாட்களாகிய நிலையில் அவர்களுக்கான அன்றாட உணவுத் தேவை பற்றி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ குலசிங்கம் திலீபன் அவர்களது அலுவலக உதவியாளர்கள் தொடர்பு கொண்டு, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரிடம் தெரியப்படுத்தப்பட்ட பொழுது, உடனடியாக அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இதேவேளை வவுனியா வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கையில் தனித்து வசிக்கும் விடுதலைப் போராட்ட வாழ்வில் சகோதரப் படுகொலைக்கு தன் இரண்டு பிள்ளைகளையும் பறிகொடுத்து யாருமற்ற நிலையில் வாழும் தாயொருவருக்கும், குகன்நகரில் விசேட தேவையுடைய பேரனுடன் வசிக்கும் அம்மா மற்றும் நோயினால் பாதிக்கப்பட்ட அம்மா என இருவருக்கும், மதவுவைத்த குளம் பகுதியில் வசிக்கும் விதவைத் தாய் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட அவரது மகளுக்கும், கூமாங்குளம் கிராமத்தில் வயது போன நிலையில் வாழும் அம்மாவுக்கும் என பலருக்கு “அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன்” அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளில் அன்னாரின் மகனாகிய குமார் அண்ணன் என அழைக்கப்படும் பிரபல மக்கள்சேவகன் இரட்ணகுமார் அவர்களின் நிதிப் பங்களிப்பில் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
அமரர் விஜயநாதன் நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கப்பட்ட இவ்வனைத்திற்கும் வேப்பங்குள ஆறாம் வீதியின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தேவா அவர்கள் கலந்து கொண்டு ஒத்தாசைகள் செய்தார். இவ்வாறு பல்வேறு விதமான சமூகப்பணிகளோடு ஐயாவின் ஐந்தாமாண்டு நினைவுகளோடு நாளும் கழிந்தது. தற்போது அன்னையர் இல்லத்தை நோக்கி விரைகிறோம்.
இதேவேளை திரு.இரட்ணகுமார் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இன்னும் பல்வேறு விதமான “கல்விக்கு கரம் கொடுப்போம், வாழ்வாதார உதவிகள்” நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” தொடர்ச்ச்சியாக நிகழ்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக, அவரது குடும்பத்தினர், உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இறைவனை வேண்டுகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
25.03.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1