மணிப்புரம் அன்னையர் இல்லத்தில், அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நிகழ்வு.. (வீடியோ படங்கள்)
மணிப்புரம் அன்னையர் இல்லத்தில், அமரர் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நிகழ்வு.. (வீடியோ படங்கள்)
##################################
அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக தாயக பிரதேசத்தில் பல்வேறு சமூகநலப் பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் இலங்கை நீதிமன்ற முதலியாராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்தவருமான வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சுவிஸில் வசிக்கும் அன்னாரின் மகன் குமாரண்ணை என அழைக்கப்படும் ரெட்ணகுமார் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பல்வேறு சமூகநலப் பணிகள் நிறைவேற்றப்பட்டன.
வவுனியா ஆச்சிபுரத்தில் நாளாந்த கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலைநேர கற்பித்தலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் கிராமங்களில் குடும்பம் குடும்பமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலருணவுப் பொதிகளும் அத்தோடு வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கை,குகன் நகர், மதவு வைத்தகுளம், கூமாங்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் ஆதரவற்று தனிமையில் வாழும் வயோதிபத் தாய்மார்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை இன்று 26.03.2021 வெள்ளிக்கிழமை அமரத்துவமடைந்த விஜயநாதன் அவர்களின் “சிரார்த்த திதி நாளாகும்” இன்றைய நாளில் மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பூசையும்,, விசேட வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்று அன்னையர்கள் விரும்பிய மதிய உணவும் பரிமாறப்பட்டது.
தொடர்ந்து இன்றைய நாளின் இரவு உணவையும் அவர்கள் விரும்பி கேட்டதன் அடிப்படையில் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களது சிரார்த்த தினமாகிய திதி நாளில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” பல்வேறு சமுகப் பணிகளை முன்னெடுத்த திரு.இரட்ணகுமார் குடும்பத்தினரை வாழ்த்துகிறது.
இதேவேளை திரு.இரட்ணகுமார் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இன்னும் பல்வேறு விதமான “கல்விக்கு கரம் கொடுப்போம், வாழ்வாதார உதவிகள்” நிகழ்வுகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” தொடர்ச்ச்சியாக நிகழ்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக, அவரது குடும்பத்தினர், உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இறைவனை வேண்டுகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
26.03.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1