லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு, “M.F” ஊடாக அள்ளிக் கொடுத்த திருமதி.செல்வி.. (வீடியோ, படங்கள்)
லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு “M.F” ஊடாக, அள்ளிக் கொடுத்த திருமதி.செல்வி.. (வீடியோ, படங்கள்)
ஐம்பதாவது அகவை நாளில், லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு அள்ளிக் கொடுத்தார் திருமதி.செல்வி அவர்கள்..
###################################
இன்றைய நாளில் சுவிஸ் நாட்டில் பிறந்தநாள் பொன்விழா காணும் செல்வி என அன்பாக எல்லோராலும் அழைக்கப்படும் திருமதி. சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பரசங்குளத்தில் உள்ள லைக்கா குடியேற்ற திட்டக் கிராமத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் பூந்தோட்டம் நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைத்த அரசு நீண்ட ஆண்டுகளுக்கு பின்னர் லைக்கா நிறுவனம் கட்டிக் கொடுத்த கிராமமான லைக்கா குடியேற்ற கிராமத்தில் குடியேற்றப்பட்டனர்.
இருப்பினும் இவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் வவுனியா நகரினை நோக்கி வர வேண்டிய சூழ்நிலை இற்றைவரை காணப்படுகிறது. இதன் காரணமாக இங்கே வாழும் அநேக குடும்பங்கள் வறிய நிலையிலே தான் உள்ளார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் வாழும் கிராமத்து மாணவர்களுக்கு திருமதி.செல்வி அவர்களின் பிறந்தநாளான இன்று அவருடைய நிதிப்பங்களிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக” வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக கிராமத்தின் மாணவர்கள் நிலையினையும், அவர்களுக்கு கற்றல் வசதிகள் தேவை பற்றி “லைக்கா மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர்” அபி என அழைக்கப்படும் திருமதி கு.நாகரதி அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர் திரு.மாணிக்கம்ஜெகன் அவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டதின் பிரகாரம் உடனடியாக திருமதி சுதாகரன் செல்வி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்டது.
மிக நேர்த்தியாய் குறித்த கிராமத்தின் மத்தியில் உள்ள பொது இடத்தில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமதி.செல்வி அவர்களின் பிறந்த நாள் நிகழ்வில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி யூடித் சுபாசினி, செயலாளர் திருமதி கு. நாகரதி, பொருளாளர் திருமதி கோ.சிந்துஜா, உப தலைவி சு.நிரோசா. மற்றும் முன்னாள் பூந்தோட்டம் நலன்புரி நிலயத்தின் தலைவராக இருந்த உ.வேலாயுதம் யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கயும் வழங்கி வைத்தனர். அத்துடன் பெருந்தொகையான மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
இறுதியாக கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவர்கள் சார்பாக செல்வி தி்.உமா, மற்றும் றம்சிகா ஆகியோர் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், திருமதி.செல்வி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
திருமதி சுதாகரன் செல்வி அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
01.04.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1