;
Athirady Tamil News

ஆனந்த இல்லத்தில் அன்னையர்களுடன், பிறந்தநாளைக் கொண்டாடினார் சுவிஸ் செல்வி.. (வீடியோ படங்கள்)

0

ஆனந்த இல்லத்தில் அன்னையர்களுடன் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் சுவிஸ் செல்வி.. (வீடியோ படங்கள்)
################################

தாயக சொந்தங்களான புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து, சுவிஸ் நாட்டில் வாழ்கின்ற “செல்வி” என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சுதாகரன் கிருபாதேவி அவர்கள் தனது ஐம்பதாவது பிறந்தநாளை தனது தாய் நாட்டின் உறவுகளுக்கு பல்வேறு சமுக தொண்டுகள் மூலமாக இன்றையதினம் கொண்டாடினார்.

சுவிஸ் நாட்டில் பல சமூக,சமய அமைப்புக்களில் பங்கெடுத்து சமுதாயப் பணிகளை தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திரு.திருமதி சுதாகரன் செல்வி குடும்பத்தினர் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தனது பொன்விழா பிறந்தநாளை முன்னிட்டு திருமதி செல்வி அவர்கள் இன்றுகாலை வவுனியா புளியங்குளம் லைக்கா கிராமத்தில், கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய மதிய நாளிலும் “அன்னையர்களுக்கு உணவு வழங்க வேண்டுமெனும்” திருமதி.செல்வி அவர்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க, திருமதி.செல்வி அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் வவுனியா மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களோடு விசேட உணவுடன், பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

திரு.திருமதி சுதாகரன் செல்வி தமது குடும்பத்தின் எந்த நிகழ்வானாலும் அந்த நாளில் உதவி தேவைப்படுவோருக்கு தங்களது நிதிப் பங்களிப்பில் உதவி செய்யும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரை கேட்டுக் கொள்வார்.

அவ்வாறே இன்றைய நாளிலும் ஆனந்த இல்லத்தில் வாழும் அன்னையர்களுக்கும், புதுப்பொலிவு பெறும் ஆனந்த இல்லத்தில் கட்டிடப் பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கும், மதிய விசேட உணவினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கியுள்ளார்.

திருமதி செல்வி அவர்களை லைக்கா கிராமத்து மாணவர்கள், ஆனந்த இல்லத்து அன்னையர் உட்பட கட்டிடத் தொழிலாளர்களுடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் “சகல செல்வங்களுடனும் இனிதாய் வாழ, இனிய பொன்விழா பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்”..

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
01.04.2021

லைக்கா கிராமத்து மாணவ செல்வங்களுக்கு, “M.F” ஊடாக அள்ளிக் கொடுத்த திருமதி.செல்வி.. (வீடியோ, படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.