புளொட் தோழர் சித்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு, “தமிழ் சிங்கள புத்தாண்டு” உதவிகள்.. (வீடியோ, படங்கள்)
புளொட் தோழர் சித்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு, “தமிழ் சிங்கள புத்தாண்டு” உதவிகள்.. (வீடியோ, படங்கள்)
###############################
மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் வசிப்பவரும், புளொட் தோழருமான சித்தா என அழைக்கப்படும் சதாசிவம் சித்திரவேல் அவர்களது இன்றைய பிறந்தநாளில் அவரின் அன்புத் துணைவியாரின் நிதிப்பங்களிப்பில், எதிர்வரும் “தமிழ் சிங்கள புத்தாண்டு” கொடுப்பனவாக, இன மத மொழி பிரதேச வேறுபாடுகளைக் கடந்த உதவிகள் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஊடாக இன்று வழங்கப்பட்டது.
வவுனியா சிங்கள பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமமான அளுத்கம அலகல்ல என்னுமிடத்தில் கணவரை இழந்த தாய், சிறுநீரக பாதிப்புக்குள்ளான குடும்பம் ஆகிய இரு குடும்பங்களுக்கு சித்திரை வருட உலருணவுப் பொதிகளும், தந்தையை இழந்த சிறுவன் உட்பட இரு சிறுவர்சிறுமிகளுக்கு சித்திரைப் புத்தாண்டு புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
புத்தாடையை பெற்றுக் கொள்ளும் போது அவர்களுக்கேயுரிய சிங்கள சமூக பண்பாட்டு முறையிலான பாதம் பணிந்து வழங்கி பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறான பெரியோரை மதிக்கும் பண்பாட்டு முறைமைகளை நாமும் நம் சிறார்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி உலருணவுப் பொதியினைப் பெற்றுக் கொண்ட சிங்களத்தாய் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் “எங்களுக்கு மிக மிக தேவையான உதவியைச் செய்தமைக்கு நன்றி. உதவி செய்தவரின் பரம்பரைக்கே இந்தப் புண்ணியம் போய்ச் சேரும், அவர்கள் குடும்பமும் நன்றாக வாழ வேண்டுமென” தோழர் சித்தாவை வாழ்த்தினார்.
ஏற்கனவே இவர்களுக்கு தோழர் சித்தாவின் துணைவியார் அவர்களின் நிதிப்பங்களிப்பில், வவுனியா பிரதேச செயலாளர் முன்னிலையில், இரண்டு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டு அவர்களின் மாணவப் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டுக்கு பங்களித்திருந்தமையுடன் இக்குடும்பத்தினருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம், வவுனியா வடக்கு பிரிவில் உள்ள புளியங்குளம் பரசங்குளத்தில் செஞ்சோலை உறவுகளின் குழந்தைகள் உட்பட தந்தை இல்லாத வறிய சூழ்நிலையில் வாழும் பிள்ளைகளுக்கு, தோழர் சித்தாவின் துணைவியார் அவர்களின் நிதிப்பங்களிப்பில், சித்திரை புத்தாண்டு உடுப்புக்கள் வழங்கப்பட்டது. அத்தோடு அப்பிரதேசத்தில் தனித்து வறிய நிலைமையில் வாழும் குடும்பத்தினர் சிலருக்கு உலருணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
ஒருசில இடங்களில் மழை பெய்தாலும் அதை பொருட்படுத்தாது தோழர் சித்தாவின் பிறந்தநாள் நிகழ்வு “புத்தாண்டு கொண்டாட்டமாக” புத்தாடைகளும், உலருணவுப் பொதிகளும் என வழங்கி மற்றோரை மகிழ்விக்கும் நிகழ்வாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் கொண்டாடப்பட்டது. இதனை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயலாளர் மாணிக்கம் ஜெகன் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்து நிகழ்த்தினார்.
தோழர் சித்தாவின் பிறந்தநாள் நிகழ்வில் “புத்தாண்டு கொண்டாட்டமாக” புத்தாடைகளும், உலருணவுப் பொதிகளும் என பெற்றுக் கொண்ட குடும்பப் பெண்களும், மாணவ மாணவிகளும் தோழர்.சித்தாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன். தோழர். சித்தாவை “நீண்டகாலம் நோய்நொடியின்றி சீரும்சிறப்புமாக வாழ வேண்டுமென” வாழ்த்தினர். “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” மனதார பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
12.04.2021