புளொட் தலைவர் ஊடாக, அமரர் விஜயநாதன் நினைவாக உதவி வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
புளொட் தலைவர் ஊடாக, அமரர் விஜயநாதன் நினைவாக உதவி வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
###############################
உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும், இலங்கை நீதிமன்ற முதலியாராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும், சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்தவருமான வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சுவிஸில் வசிக்கும் அன்னாரின் மகன் குமாரண்ணை என அழைக்கப்படும் ரெட்ணகுமார் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பல்வேறு சமூகநலப் பணிகள் வடகிழக்கெங்கும் “புளொட் சுவிஸ் கிளை” சார்பிலும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” சார்பிலும் நிறைவேற்றப்பட்டன.
அந்தவகையில் பல்வேறு தேவைகள் பற்றிய விண்ணப்பங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு நாள்தோறும் கிடைத்த வண்ணமே உள்ளது. அவ்வாறே மிகவும் வறிய நிலையில் போக்குவரத்திற்கு சிரமப்படும் இரண்டு குடும்பங்களின் மிக முக்கியமான தேவையான துவிச்சக்கர வண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
தொழில் மற்றும் போக்குவரத்துக்கு மிக முக்கியமான தேவைகளுக்காக நடந்தே செல்லும் காரணத்தால் பல இடையூறுகளை எதிர்நோக்கும் குடும்பங்களின் தேவையினை அமரர் விஜயநாதன் நினைவு நாளில் கௌரவ யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்று வழங்கி வைத்தார்.
விசேசமாக இன்றையதினம் அமரர் விஜயநாதன் நினைவாக அவரது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில், சுவிஸ்ரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” ஊடாக இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சித்தார்த்தன், புளொட் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கஜதீபன் ஆகியோருடன், புளொட் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பயனாளிகளெனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை அமரர் விஜயநாதன் அவர்களின் நினைவாக வவுனியா ஆச்சிபுரத்தில் நாளாந்த கூலி வேலைக்கு செல்லும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலைநேர கற்பித்தலுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், கொரோனா தொற்று காரணமாக வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் கிராமங்களில் குடும்பம் குடும்பமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளாகிய நிலையில் அவர்களுக்கான உலருணவுப் பொதிகளும் அத்தோடு வேப்பங்குளம் ஏழாம் ஒழுங்கை,குகன் நகர், மதவு வைத்தகுளம், கூமாங்குளம் போன்ற கிராமங்களில் வசிக்கும் ஆதரவற்று தனிமையில் வாழும் வயோதிபத் தாய்மார்களுக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் 26.03.2021 வெள்ளிக்கிழமை அமரத்துவமடைந்த விஜயநாதன் அவர்களின் “சிரார்த்த திதி நாளாகும்” அன்றைய நாளில் மணிப்புரம் ஆனந்த இல்லத்தில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆத்மசாந்திப் பூசையும்,, விசேட வழிபாட்டு நிகழ்வும் நடைபெற்று அன்னையர்கள் விரும்பிய மதிய உணவும் பரிமாறப்பட்டது. தொடர்ந்து அன்றைய நாளின் இரவு உணவையும் அவர்கள் விரும்பி கேட்டதன் அடிப்படையில் உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அத்துடன் அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளில் வவுனியாவில் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டவர்களுக்கு நல்லின பழமர நாற்றுக் கன்றுகள் வழங்கும் நிகழ்வும் உட்பட பல்வேறு நிகழ்வுகள் திரு.இரட்ணகுமார் குடும்பத்தின் நிதிப் பங்களிப்பில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” நடத்தப்பட்டது. இதன் முத்தாய்ப்பாக இன்றைய “துவிச்சக்கர வண்டிகள் வழங்கும்” நிகழ்வு நடைபெற்றது. கடந்த மாதம் யாழில் ஏற்பட்ட “கொரோனா” சூழ்நிலை காரணமாகவே இன்றையதினம் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக, அவரது குடும்பத்தினர், உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” இறைவனை வேண்டுகிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.
15.04.2021
அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் நினைவாக, நல்லின பழ நாற்றுக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1