புதுவருட தினத்தன்று கூமாங்குளத்தில், புதிய வீட்டுக்கான தொடக்க நிகழ்வுடன்.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள்)
புதுவருட தினத்தன்று கூமாங்குளத்தில், புதிய வீட்டுக்கான தொடக்க நிகழ்வுடன்.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள்)
#############################
வவுனியா கூமாங்குளம் பகுதியில் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் நிலை பற்றி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் தமிழ் விருட்சத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும், உப செயலாளருமான சந்திரபத்மன் பாபு அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரை குறிப்பிட்ட வீட்டுக்கு நேரே அழைத்துச் சென்று நிலமைகளை அக்குவேறு ஆணிவேறாக தெளிவுபடுத்தி பொருளாதாரத்தில் பின்தங்கிய அதேவேளை கணவரும் மனைவியும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தி “இடிந்து விழும் நிலையில் இருந்த, அந்த வீட்டின் கூரையை மாற்றித் தருமாறு” பணிவன்புடன் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்தக் குடும்பத்தின் உண்மை நிலையினை ஒளிப்பதிவு செய்து எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” வட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட போது, சிலஉறவுகள், தோழர்கள் இதனை செய்ய (கூரையை மாற்றிக் கொடுக்க) முன்வந்த போதும், பிரபல வர்த்தகரும், சமூகத் தொண்டரும், கனடா “நம் தாயகம்” வியாபார நிறுவனத்தின் தலைவரும், மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான திரு. பிரின்ஸ் குணரட்ணம் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் இவர்களுக்கான புதிய தனியறையினையும், கூரை முதல் மேலதிக திருத்தங்களை செய்து புதிதாக வீடு அமைத்துத் தருவதாக தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் இந்த பாதுகாப்பற்ற வீட்டில், வயதுக்கு வந்த இளம் மகளுடன் வாழும் தாய் தந்தையரின் குடும்ப சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு இவ்வாறான வீட்டுவசதியை செய்து தருவதற்கு திரு.பிரின்ஸ் குணரெட்னம் குடும்பத்தினர் இணங்கியுள்ளனர்.
இதனை முன்னிட்டு சித்திர வருடப் பிறப்பன்று சுப நேரத்தில் புதிய வீட்டு அறைக்கான அத்திவாரம் வெட்டப்பட்டு “நாள் கல் பூசைகள்” செய்யப்பட்டு அத்திவாரக்கல் வைக்கப்பட்டது.. இந்நிகழ்வில் அயல் வீடுகளில் வசிப்போருடன், வட்டார பிரதேசசபை உறுப்பினருமான திரு சந்திரபத்மன் பாபு அவர்களும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக வீட்டுக்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கான புதிய தனியறையினையும், கூரை முதல் மேலதிக திருத்தங்களை செய்து புதிதாக வீடு அமைக்கும் வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து வேலையும் பூர்த்துயாகியதும் முழுமையான படங்கள், செய்திகள் பகிரப்படும்.
இந்நேரத்தில் இவ்வாறான சகல வகையிலும் ஒதுக்கப்பட்டு கவனிப்பாரின்றி அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் வாழுவோருக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என பலவகையிலும் முயற்சி செய்து, பல உதவிகளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு” செய்து வரும், “சமூகநேயனும்”, தேசியத்தை தனது உயிர்மூச்சாக நினைத்து பயணிப்பவரும், புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் வசிக்கும் “நம் தாயகம்” இராஜா (உதயராஜா) அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
29.04.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1