;
Athirady Tamil News

தவசிகுளம் மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கினார் சுவிஸ் கிஷாந்த்.. (படங்கள் வீடியோ)

0

தவசிகுளம் அறநெறி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கினார் சுவிஸில் வசிக்கும் செல்வன் கிஷாந்த்.
###################################

யாழ் சரவணையைச் சேர்ந்தவர்களும், சுவிஸ் சூரிச்சில் வசிப்பவர்களும் புளொட் தோழருமான பாபு என அழைக்கப்படும் சித்திரவேல் ஹேமா தம்பதிகளின் ஏகபுதல்வன் செல்வன் கிஷாந்த் தனது பதினெட்டாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தவசிக்குளம் மற்றும் அதன் கிராமத்தில் உள்ள ஏனைய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஆதி பைரவர் ஆலய உள்மண்டபத்தில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட உயர்தரக் கல்வி கருகும் அறநெறி மாணவர்களுக்கு கற்றல் பொதிகளை வழங்கி வைத்தார். அறநெறி மாணவர்களோடு ஆசிரியைகளும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வை ஒழுங்குபடுத்திய சமுகஆர்வலர் காந்தன் அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உரையாற்றிய போது, “மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இவ்வாறான புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட உதவிகளை மிகவும் பின்தங்கிய இடங்களில் வாழும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு வழங்குவதன் நோக்கம், எதிர்காலம் சவால் மிக்கது அதை எதிர் கொள்ளும் அறிவுசார் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஒவ்வொரு மாணவர்களுக்குத் தேவை அதற்கு தடையாக இருக்கும் இவ்வாறான இடர்களை களைந்து கற்றலுக்கான சூழலை ஏற்படுத்தி எதிர்காலத்துக்குரிய தலைவர்களாக மாணவர்களை உருவாக்குவதேயாகும். இதன் வழியாக இன்றைய நாளில் எமது தவசிக்குளத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சுவிசில் பிறந்து வளர்ந்த செல்வன் கிஷாந்த் அவர்களின் பதினெட்டாவத்து பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் பொதிகள் வழங்கி வைக்கப்படுகிறது” என்றார்

ஏற்கனவே செல்வன்.கிஷாந்த் அவர்களுடைய பிறந்தநாள் தொடர்பாக இரண்டு வெவ்வேறு இடங்களில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டது. அந்த வகையில் பம்மைமடு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் சாமிநாதன் என்ற முதியவரின் செயற்கை கால் தொடர்பான மருத்துவ சிகிச்சைக்காக மாங்குளம் உயிரிழை நிறுவனத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று வருவதற்கான போக்குகுவரத்து செலவுத் தொகையினை வழங்கிய செல்வன்.கிஷாந்த் செக்கட்டிப் புலவு செல்வாநகர் கிராமத்தில் வசிக்கும் பெருந்தொகையான மாணவர்களுக்கு பயன்தரு நல்லின பழ மரக்கன்றுகளையும் வழங்கினார்.

இவ்வாறு தனது பதினெட்டாவது பிறந்த நாளை தனது தாயக உறவுகளின் தேவைகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக கேட்டறிந்து, அந்த இடர்களை போக்குவதற்கு தேவையான அனைத்து நிதியுதவினையும் தந்துதவியுள்ளார். அந்த வகையில் தவசிகுளம் கிராமத்தில் வசிக்கும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் பொதிகளையும் வழங்குவதற்கு நிதியுதவி வழங்கியுள்ளார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் பொதிகள் அறநெறி ஆசிரியைகளினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவி செல்வி. தமிழ்மாறன் பிரகாசினி அவர்களால் நன்றியுரை கூறப்பட்டதுடன், இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் செல்வன் கிஷாந்துக்கு, மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது. “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” செல்வன்.கிஷாந்துக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

01.05.2021

இடதுகாலினை இழந்த முதியவருக்கு, மருத்துவ போக்குவரத்து நிதியுதவி.. (படங்கள் வீடியோ)

சுவிஸ் கிஷாந்த் அவர்களின் பிறந்தநாளில், பயன்தரு நல்லின மரக்கன்றுகள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.