“மாணிக்கதாசன் இலவச கல்விக்கூடம்” செல்வா நகரில் ஆரம்பம்.. (வீடியோ, படங்கள்)
“மாணிக்கதாசன் இலவச கல்விக்கூடம்” செல்வா நகரில் ஆரம்பம்.. (வீடியோ படங்கள்)
#################################
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மற்றுமோர் உதயம் “மாலைநேர இலவசக் கல்வி நிலையம்”. மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு வழிகளிலும் பலதரப்பட்ட வகைகளிலும் சமூக நற்பணிகளை தொடர்ந்து செய்து வருவதைக் காணலாம்.
மிக முக்கியமாக தமிழ் மக்களின் எதிர்கால இருப்பை தக்க வைக்க வேண்டுமானால் அது கல்வியால் மட்டுமே முடியும் என நம்புகிறது மாணிக்கதாசன் நற்பணி மன்றம். அந்த இலக்கினை அடைவதற்கான நடவடிக்கையின் முத்தாய்ப்பாகவே கிராமங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் வசதிகளை இலகுபடுத்தி அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் காணப்படும் இடர்களை நீக்கி ஒரு சுதந்திரமான கல்விச் சூழலை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஏற்படுத்தி வருகிறது.
பல்வேறு தடவைகளில் கிராமப்புர மாணவர்களின் கோரிக்கையான மாலைநேரத்து பிரத்தியேக வகுப்புக்களை ஒழுங்கமைப்பு செய்து தரும்படியான கோரிக்கையினை எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பொருளாதார ஆலோசகரும், சர்வதேச அமைப்பாளருமான தோழர் சுவிஸ்ரஞ்சன் அவர்களிடமும், எமது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” பிரதம ஆலோசகர் தோழர் இராகவன் (ஆர்ஆர்) அவர்களிடமும் தெரிவித்த போது, பல்வேறுபட்ட கலந்துரையாடல்களையும், பலரது ஆலோசனைகளையும் உள்வாங்கி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” எழுச்சிமிகு தொடக்கமாக கல்வியில் கிராமப்புர மாணவர்களை முன்னேற்றுவதற்கும் எதிர்காலத்தை திடமாக எதிர்கொள்ளும் வகையில் மாணவ சமூகத்தை உருவாக்குமுகமாக கிராமங்கள் தோறும் மாணிக்கதாசன் இலவச கல்விக் கூடங்களை நிறுவி தமிழர் கல்வி வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதேயாகும்.
அந்தவகையில் 01.05.2021 அன்று சனிக்கிழமை சுபநேரத்தில் வவுனியா செக்கட்டிப்புலவு கிராமசேவகர் பிரிவில் உள்ள செல்வா நகரி்ல் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் முதலாம் வகுப்பில் இருந்து ஏழாம் வகுப்பு வரையான அக்கிராம மாணவ, மாணவிகளுக்கான “மாலைநேர இலவசக் கல்வி நிலையம்” மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி திருமதி ரேகா அவர்களினால் வைபக ரீதியாக தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தொகையான மாணவ மாணவிகளும், அவர்தம் பெற்றோர்களும், கிராமிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், “மாணிக்கதாசன் இலவச கல்விக் கூடத்தின்” பொறுப்பாசிரியர் திருமதி வேஜினி அவர்களும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர் கவிஞர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாணிக்கதாசன் இலவச கல்விக் கூடத்திற்கு தனியான குழு அமைக்கப்பட்டு நிர்வகிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள் “இலவச கல்வி நிலையம்” தொடங்கப்பட்டதை ஆர்ப்பரித்து தமது சந்தோசத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்…
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
01.05.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1