தொழில் வாய்ப்பை இழந்த குடும்பத்துக்கு, “M.F” ஊடாக அவசரகால உலருணவுப் பொதி வழங்கல்.. (படங்கள்)
தொழில் வாய்ப்பை இழந்த குடும்பத்துக்கு, “M.F” ஊடாக அவசரகால உலருணவுப் பொதி வழங்கல்.. (படங்கள்)
கொரோனா தொற்று நோய் காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த குடும்பத்துக்கு அவசரகால உலருணவுப் பொதி வழங்கப்பட்டது.
################################
கிளிநொச்சி ஜெயந்திபுரத்தில் வசிக்கும் இளம் குடும்பத்திற்கு அவசரகால உலருணவுப் பொதியும், ஒரு சிறிய தொகைப் பணமும் கனடா வாழ் “சத்தி அக்கா” என அழைக்கப்படும் திருமதி சத்தியவதி சங்கரலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது இன்று வழங்கப்பட்டது.
கொரோனா தொற்று நோய் சமீபகாலங்களில் மிக வேகமாக வடபகுதியெங்கும் பரவி வரும் சூழ்நிலையில் சுய தனிமைப்படுத்தல்களும் கிராம முடக்கங்களும் தொழில் அலுவலகம் இடைநிறுத்தங்களும் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் நிலையில் அன்றாட தொழில் செய்வோர்களின் நாளாந்த வருமானம் தடைபட்டதனால் சாப்பாட்டுக்கே தள்ளாடும் நிலை பரவலாக நாட்டில் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி ஜெயந்திபுரத்தில் வசிக்கும் இரண்டு சிறிய பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் வேண்டுகோளுக்கிணங்க “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால்” குறிப்பிட்ட இடத்திற்கு சென்று உலருணவுப் பொதியும், சிறிய பணமும் வழங்கப்பட்டது.
இவ்வாறான பல குடும்பங்கள் தற்போதைய சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில் சிறிய குழந்தைகளைக் கொண்ட குடும்பம் என்ற வகையில் குழந்தைகளுக்கான விசேட உலருணவுப் பொதி இவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த உதவியை நாம் கேட்டவுடன் புங்குடுதீவைச் சேர்ந்தவரும், புங்குடுதீவு தல்லையப்பற்று முருகன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களில் ஒருவரும், கனடாவில் வசிப்பவருமான “சத்திஅக்கா” என எல்லோலாலும் அழைக்கப்படும் திருமதி சத்தியவதி சங்கரலிங்கம் அவர்களின் நிதிப்பங்களிப்பில் அவர்களின் குடும்பத்தின் சார்பில் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுதவியை வழங்கிய கனடாவாழ் சத்தி அக்கா கடந்த மாதம் 30.03.2021 இல் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் என்பது விசேடமாக குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் சத்தி அக்காவுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
08.05.2021