;
Athirady Tamil News

“மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடம்” திரைநீக்கத்துடன் இன்று ஆரம்பம்… (வீடியோ படங்கள்)

0

“மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடம்” திரைநீக்கத்துடன் இன்று ஆரம்பம்… (வீடியோ படங்கள்)

“மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடம்” பெயர்பலகை திரைநீக்கம் செய்து வைத்தார் தவிசாளர் திரு யோகராஜா..
##################################

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” நிகழ்ச்சித் திட்டத்தின் மற்றுமோர் புரட்சி “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடம்”. கிராமப்புர மாணவர்களின் கல்வி எழுச்சிக்கும், அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்யும் நோக்கத்துடன் கிராமங்கள் தோறும் இலவச மாலைநேர கற்றல் வசதிகளை வறிய மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு உதவும் வகையில் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக முற்றிலும் விவசாய தொழிலாளர்கள் வாழும் கிராமமான வவுனியா செல்வாநகர் கிராமத்தை தேர்ந்தெடுத்து “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடம்” அமைக்கப்பட்டு தொடங்கப்படவுள்ளது..

அதன் முதற்கட்டமாக “மாணிக்கதாசன் மறுமலர்ச்சி கல்விக்கூடம்” பெயர்ப்பலகையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் திரு தர்மலிங்கம் யோகராஜா அவர்கள் பிரதம அதீதியாக கலந்து கொண்டு திரைநீக்கம் செய்து வைத்து மாணவர்களுக்கு உரையாற்றினார்.

அவர் தனதுரையில் பின்தங்கிய கிராமங்களில் இவ்வாறான இலவச கல்விச் செயற்பாடுகளை வரவேற்கின்றேன், இதனூடாக நிச்சயமாக மாணவர்களின் பெறுபேறுகள் உயர்வடைவதற்கான சாத்தியக் கூறுகளை நாம் காணலாம், எனவே இதனை அமுல்படுத்தும் நிறுவனமான “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவை காலத்தால் போற்றத்தக்க செயல், இதனை மனதார வாழ்த்துகிறேன் என்றார். மாணவர்களின் குதூகலமான கைதட்டலுடன் நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

19.05.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.