;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர். குலசேகரம்பிள்ளை அவர்களின், நிவாரண உதவிகள்.. (படங்கள்)

0

புங்குடுதீவு அமரர். குலசேகரம்பிள்ளை அவர்களின், நிவாரண உதவிகள்.. (படங்கள்)

புங்குடுதீவு அமரர் இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் நிகழ்வும், நிவாரண உதவிகளும்..
#################################

புங்குடுதீவு மடத்துவெளி ஶ்ரீபாலசுப்பிரமணியர் தேவஸ்தானம் (வயலூர்முருகன்) மடத்துவெளி சனசமூக நிலையம் ஆகியவற்றின், முன்னைநாள் தலைவரும் புங்குடுதீவு மகாவித்தியாலய நீன்டகால ஆசிரியருமான புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர் திரு.இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்களின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் நினைவு தினம் தாயகத்தில் பல்வேறு அறப்பணிகள் ஊடாக கொண்டாடப்பட்டது.

அமரர் இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்களது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் ஆகியோர் வழங்கிய நிதிப்பங்களிப்பில், வவுனியாவிலிருந்து தொலைவில் உள்ள தாலிக்குளம் எனுமிடத்தில் வாழும் மாற்றுவலுவுள்ளோர் அடங்கிய குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

தாலிக்குளம் கிராம்மானது முற்றிலுமாக மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கென உருவாக்கப்பட்ட கிராமமாகும். ஏதோ ஒரு வகையில் உடல்வலுவை இழந்தோர்க்கு அடைக்கலமாக குடியிருப்பதற்கு சீட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கிராமமாகும்.

இக்கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள் குறிப்பாக சமுர்த்தி கிராமிய அமைப்பின் தலைவி, செயலாளர், பொருளாளர் ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்க உலருணவுப் பொதிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

நூற்றாண்டு பிறந்த நாள் நிகழ்வை முன்னிட்டு கொரோனா தொற்று நோய் காரணமாக தினசரி வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களை தெரிவு செய்து அக்குடும்பங்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் இராமலிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்களை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தனது இனிய பிறந்தநாள் வாழ்த்தினை நினைவு கூறிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

18.06.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.