கிளி.ஊற்றுப்புலம் மக்களுக்கு உலருணவுப் பொதி வழங்கியது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள், வீடியோ)
கிளி.ஊற்றுப்புலம் மக்களுக்கு உலருணவுப் பொதி வழங்கியது “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” (படங்கள், வீடியோ)
###################################
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்து மக்களின் வறிய நிலைமையினை கருத்திற் கொண்டு புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கமைவாக இன்றைய நாளில் (10.07.2021) ஊற்றுப்புல கிராம மக்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று நோய் காரணமாக அமுல்படுத்தப்பட்ட பயணத்தடை காரணமாக அன்றாட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கபட்டனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ச்சி கண்டிருந்ததை பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட கிராமமான ஊற்றுப்புலம் கிராமத்தில் வாழும் அநேகர் நலிவுற்றவர்களே குறிப்பாக அன்றாட கூலித் தொழிலாளர்கள் குடும்பங்கள் ஆகும். யுத்தத்தின் வடுக்கள் இங்கு வாழும் எல்லா குடும்பங்களிலும் காணப்படுகின்றது. கணவரில்லாமல் குழந்தைகளோடு வாழும் குடும்பங்கள், பிள்ளைகளை யுத்தத்திற்கு பறிகொடுத்து ஆதரவற்று வாழும் முதியோர் குடும்பங்கள், தாய் தந்தை இருவரில் ஒருவரையோ அல்லது இருவரையுமே இழந்து வாழும் குடும்பம் என பல தரப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பெற்றோரை இறுதி யுத்தத்தில் இழந்த சிறுவர்கள் தமது அம்மம்மாவுடன் வாழ்ந்து வருகின்ற பல சிறுவர்கள் இங்கே உள்ளனர். அவர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். அந்தவகையில் புளொட் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர்.ராஜா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க தோழர் சுவிஸ்ரஞ்சனின் மனைவியின் பிறந்ததினத்துக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புக்கள் பின்னர் அவ்வன்பளிப்புக்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நற்பணிக்கு பயண்படுத்தும் வகையில் தோழர்குமார் அண்ணர், தோழர்.மனோ, ஆகியோர் வழங்கிய நிதி அன்பளிப்பு மூலமும், மேலும் இப்பணிகளை விஸ்தரிக்கும் வகையில் இச்செயற்பாட்டுக்கென புளொட் சுவிஸ் தோழர் பேர்ண் தயா “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கு” வழங்கிய நிதி மூலமும் மேற்படி ஊற்றுப்புலம் கிராமத்து மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
இவ்வாறே பல வழிகளிலும் மக்களுக்கான நற்பணிகளை புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகள் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட உதவிக்கு நிதிப்பங்களிப்பு செய்த சுவிஸ்வாழ் புளொட் உறவுகளான தோழர் குமாரண்ணன், தோழர் மனோ, தோழர் பேர்ண் தயா ஆகியோருக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு திருமதி சுவிஸ்ரஞ்சன் மோகனா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
10.07.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1