மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)
மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)
மாவீரர் குடும்பத்திற்கு, சுவிஸ் திருமதி தாரணி சுவீதனின் நிதியில், வாழ்வாதார உதவி வழங்கியது மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###################################
சுவிசில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக இன்று (14.07.2021) வழங்கப்பட்டது.
சுவிசில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்கள் தனது பிறந்தநாளை 29.05.2021 அன்று தாயக உறவுகளோடு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். அதுமட்டுமன்றி பாடசாலை நடைபெறாத பயணத்தடை காரணமாக வீட்டில் இருந்து கற்பதற்கு வசதியாக பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கற்றல் உபகரணங்கள் பொதியினை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக வழங்கி வைத்தார்.
இருப்பினும் இறுதிப் போரில் தனது மகனை மாவீரனாக பறிகொடுத்து வயது மூப்பு மற்றும் நோய் காரணமாக தொழில் புரிய இயலாத கணவருடனும், மகளுடனும் தையல் தொழில் செய்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் கொரோனா நோய் காரணமாக பயணத்தடையினால் நாளாந்த வருமானத்தை இழந்து அவதியுற்ற வேளை சமூக ஆர்வலர் விஜிதன் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை தொடர்பு கொண்டு உதவியாக தையல் இயந்திரம் கோரிய போது.. திருமதி தாரணி சுவீதன் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது நிதிப்பங்களிப்பில் குறித்த மாவீரர் குடும்பத்தின் கோரிக்கையினை ஏற்று அந்த குடும்பத்திற்கு தையல் இயந்திரத்தை வழங்கி வைக்குமாறு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை கேட்டிருந்தார்..
உடனடியாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் அதற்கான பணிகளை தொடங்கிய போதும் நாடில் ஏற்பட்ட பயணத்தடை காரணமாக முடியாமல் போனது .இருப்பினும் தற்போது போக்குவரத்து சீராக நடைபெறும் சூழ்நிலையில் இன்றைய நாளில் முல்லைத்தீவு முத்தையன் கட்டு இடதுகரையில் வசிக்கும் துசாந்தகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட மாவீரர் சோலைக்குமரன் அவர்களது தாய் தந்தையான திரு திருமதி சூரியகுமார் சௌந்தரேஸ்வரி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் கிராமத்தின் கிராமசேவையாளர், பிரத்தியேக அலுவலக பணி காரணமாக கலந்து கொள்ள முடியாமல் இருப்பதாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் தெரிவித்து, தனது பிரதிநிதியாக கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு சுப்பையா சிவராசா அவர்களை அனுப்பி வைத்து அவரினால் வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக வைபவ ரீதியாக உதவி வழங்குநர் பெயர்ப்பலகையினை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு சுப்பையா சிவராசா அவர்கள் திரைநீக்கம் செய்து மாவீரர் குடும்பத்திற்கு கையளித்தார்.
வாழ்வாதார உதவியை பெற்றுக் கொண்ட மாவீரர் குடும்பத்தின் சார்பாக நன்றி கூறிய மாவீரரின் தங்கை “மீள்குடியேறிய பின் சுயமாக உழைத்து முன்னேறக்கூடிய தொழில்த் திறமை இருந்தாலும் அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லாத காரணத்தினால் அம்மாவின் உழைப்பு அவசியமாக இருந்தது .அம்மாவாலும் இயலாத நிலமை வந்த போது நான் ஆடைத் தொழிற்சாலைக்கு போய் வந்தேன், அது மிகவும் மோசமான வேலையாக இருந்தது”.
“இந்த நேரத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தொடர்பாக கேள்விப்பட்டு சமூக ஆர்வலர் விஜிதன் அண்ணா ஊடாக உதவி கேட்ட போது.. சுவிசில் வசிக்கும் திருமதி தாரணி சுவீதன் அவர்கள் எமக்கு நாம் கேட்ட உதவி செய்வதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்கள்..
அதன்படி இன்று எமக்கு இந்த உதவியை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக கிடைத்துள்ளது எல்லோருக்கு நன்றிகள்.. குறிப்பாக தாரணி அக்காவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், எங்கள் குடும்பத்தின் வறுமையை போக்கியுள்ளீர்கள்.. மிக்க நன்றி அக்கா” என்றார்..
இவ்வாறு புலம்பெயர் சமூகமானது தங்களது சுப நிகழ்வுகளை, தாம் கொண்டாடாமல் தாயக உறவுகளின் வாழ்வில் ஒளியேற்றி வாழ்கின்றனர். அந்த வகையில் “திருமதி தாரணி சுவீதன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை” மாவீரர் குடும்பத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தெரிவித்துக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
14.07.2021
சுவிஸ் திருமதி தாரணி சுவீதன் அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1