புங்குடுதீவு குணராசா நினைவாக, “பொலிஸ் பொறுப்பதிகாரி” முன்னிலையில், “கோழிக்கூடும், கோழிகளும்” வழங்கல்.. (வீடியோ, படங்கள்)
அமரர் குணராசா நினைவாக கணவரை இழந்து வாழும் குடும்ப உறவுக்கு வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு வழங்கப்பட்டது. -மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
###############################
புங்குடுதீவில் பிறந்து, இலங்கை தலைநகரில் வர்த்தகத்தில் தடம்பதித்து, கனடாவில் அமரத்துவமடைந்த “குணம்” என அழைக்கப்படும் அமரர் முத்தையா குணராசா அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தில் அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் கணவர் காலமான நிலையில் மூன்று குழந்தையுடன் வறிய நிலையில் வசிக்கும் சிதம்பரபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி புஸ்பநாதன் சுபாசினி என்பவருக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளும், கோழிக்கூடும் இன்றைய நாளில் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் “கணவரை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசிக்கும் நாளாந்த கூலிவேலை செய்து அதில்வரும் வருமானத்தில் மிகவும் வறிய சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்” என எமக்கு அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தங்களால் வளர்க்கப்படும் கோழிகளுக்கு கூடு தேவை என சமூக ஆர்வலர் சஞ்சீவன் அவர்கள் ஊடாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் விண்ணப்பித்திருந்தார். அவர்களது கோரிக்கை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் உயர்பீட உறுப்பினர்களால் தீவிரமாக கலந்தாலோசனை செய்யப்பட்டு அமரர் முத்தையா குணராசா அவர்களது கால்நூற்றாண்டு நினைவாக குறிப்பிட்ட திருமதி புஸ்பநாதன் சுபாசினி அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளையும் கோழிக் கூட்டினையும் வழங்கி வைக்கும்படி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தை” அமரர் முத்தையா குணராசா குடும்பத்தினர், குறிப்பாக கனடாவில் வசிக்கும் “நம் தாயகம்” குழுமத்தின் உரிமையாளர்களின் ஒருவரும், “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கனடா கிளையின் இணைப்பாளர்களில் ஒருவருமான குணராசா உதயராஜா அவர்கள் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்றைய நாளில் மீண்டும் அமரர் முத்தையா குணராஜா அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் வாழ்வாதார உதவியாக கோழிகளுடன், கோழிக்கூடு வழங்கி வைக்கப்பட்டது.
அமரர் முத்தையா குணராசா அவர்களது 25 ஆம் ஆண்டு நினைவாக வாழ்வாதார உதவி வழங்கும் இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இவ்வாழ்வாதர உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம அழைப்பாளராக வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு.எஸ்.எம். திலகரட்ன அவர்கள் கலந்து கொண்டு வாழ்வாதார பெயர்ப் பலகையினை திரைநீக்கம் செய்து வைக்க சிதம்பரபுரம் கற்குளம் 3 இன் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு குமணன் அவர்கள் பயனாளிக்கு கோழிகளை வழங்கி வைத்து உத்தியோகபூர்வமாக திருமதி புஸ்பநாதன் சுபாசினி குடும்பத்திற்கு கையளித்தார். மேலும் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் சஞ்சீவன் அவர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வுக்கு உதவி செய்தார்.
விசேட அழைப்பாளராக கலந்து கொண்ட பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில் “நல்ல விசயத்தை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் செய்துள்ளது. இவர்களை எனக்கு நன்றாக தெரியும், கணவர் இல்லாமல் பிள்ளைகள வளர்க்க ரொம்ப கஸ்டப்படும் இந்த அம்மாவுக்கு சரியான உதவி செய்த எல்லாருக்கும் நன்றிகள்” என்றார்
வாழ்வாதார உதவியினைப் பெற்றுக் கொண்ட திருமதி புஸ்பநாதன் சுபாசினி நன்றி கூறுகையில்.. “இவ்வாறான உதவி இப்படி விரைவில் கிடைக்குமென நான் நினைக்கவில்லை. சஞ்சீவன் அண்ணன் மூலமாக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் கொரோனா காலத்தில் உலருணவுப் பொதி தருவதற்கு வந்திருந்த வேளையில், எனது நிலையினைச் சொல்லி வாழ்வாதார உதவி கேட்டிருந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய உதவி கிடைக்குமென்று நான் நினைக்கவில்லை”.
“எனக்கு கணவர் இல்லை அவர் காலமாகி நான்கு வருடங்கள்.. நாளாந்த கூலி வேலை செய்தே குடும்பத்தை பார்க்கின்றேன். கோழி வளர்க்கின்றேன், அதை பாதுகாத்து வைப்பதற்கு ஏற்ற கூடு இல்லை. எங்களுக்கு வீட்டு வசதியும் இல்லை .காலைக்கடனை கழிப்பதற்கும் பக்கத்தில் உள்ள பற்றைகளைத் தான் பாவிக்கின்றோம் எனக்கு வளர்ந்த பெண் பிள்ளையும் உள்ளனர்”.
“இந்த பெரிய உதவியை மனமுருகி தந்தமைக்காக அமரர் முத்தையா குணராஜா குடும்பத்தினரை கையெடுத்து கும்புடுகிறேன். நான் கேட்டுக் கொண்ட உதவியை அதவும் இப்படி பெரிய உதவியை தந்த உங்களுக்கு நன்றிகள். அடிக்கடி வந்து இந்த உதவி தொடர்பாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த அண்ணாவும், எங்கள் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவன் தம்பியும் நிறையவே கஸ்டப்பட்டார்கள் அவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்”.
“அமரர் முத்தையா குணராசா அவர்களது 25 ஆவது ஆண்டு நினைவாக அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் எனது குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு வழங்கியுள்ளார்கள். அவர்களை கை எடுத்து கும்புடுகிறேன் நன்றி.. ரொம்ப நன்றி உங்கள் அனைவருக்கும்” என்றார்.
அமரர் முத்தையா குணராசா குடும்பத்தினர் இவ்வாறு பல்வேறு உதவிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றார்கள். அவர்களுக்கும் குறிப்பாக கனடா நம் தாயகம் குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், கனடா மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான “சமூகநேயத் தொண்டன்” குணராஜா உதயராஜா அவர்களுக்கும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நன்றிகள்..
இவ்வாறான உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள்.. அமரர் முத்தையா குணராசா அவர்களின் ஆத்மா சாந்திக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றமும், தாயக உறவுகளுடன் இணைந்து இறையருளை வேண்டிக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
11.08.2021
அமரர் குணராசா நினைவாக, “M.F” ஊடாக வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள் வீடியோ)
அமரர் மு.குணராசா அவர்களின் கால்நூற்றாண்டு நினைவாக, வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்)
பல்கலைக்கழக மாணவிக்கு, மாதாந்த உதவிப் பணம் வழங்கிய கனடா உறவுகள்..! (வீடியோ, படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1