“சுவிஸ் லுக்ஸ்” அவர்களின் பிறந்தநாளில், முன்னாள் போராளி குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.. (வீடியோ படங்கள்)
“சுவிஸ் லுக்ஸ்” அவர்களின் பிறந்தநாளில், முன்னாள் போராளி குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியை வழங்கினார் கரைதுறைப்பற்று தவிசாளர்.
###################################
புங்குடுதீவில் பிறந்து சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும் தாயகத்தை நேசிக்கும், தேசியத்தின்பால் அக்கறையுடன் பயணிக்கும் லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் உள்ள மாவீரன் பண்டாரவன்னியன் கிராமத்தில், தமிழீழ கிராம சேவையாளராக பணிபுரிந்த நிலையில் இறுதி யுத்தத்தின் போது கணவர் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், தனது ஒற்றைக்கண்ணையும் இழந்து ஒரே மகளுடன் நாளாந்த கேலி வேலை செய்து வாழ்ந்து வரும் திருமதி சிவரூபன் தமிழினி என்பவருக்கு கடந்தவாரம் பிறந்தநாளைக் கொண்டாடிய சுவிஸ் பேர்ண் வாழ் தமிழுறவான லுக்ஸ் அண்ணன் என எல்லோராலும் அழைக்கப்படும் திரு சின்னத்தம்பி இலக்ஸ்மணன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்வாதார உதவியாக கோழிக் கூட்டினையம், கோழிகளையும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கமலதாசன் விஜிந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக கொரோனா நிவாரணப் பணிக்கான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வுகள் பல்வேறு மாவட்டங்களிலும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் முன்னெடுக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது. அவ்வேளையில் ஒட்டுசுட்டான் மாவீரன் பண்டாரவன்னியன் கிராமத்தில் வசிக்கும் திருமதி சிவரூபன் தமிழினி தனது பாதிக்கப்பட்ட நிலையினை வீடியோ ஒளிப்பதிவின் மூலமாக வாழ்வாதார உதவி கோரியிருந்தார்.
இவ்வீடியோ ஒளிப்பதிவினை நாம் எமது மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்த போது, சுவிஸ்வாழ் தமிழுறவான லுக்ஸ் அண்ணன் அவர்கள், தன்னுடைய பிறந்த நாள் நிதிப்பங்களிப்பு மூலம் உதவி கோரிய குறித்த திருமதி சிவரூபன் தமிழினி அவர்கள் கேட்டுக் கொண்ட உதவியான கோழிக் கூட்டினை வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளரும் “நாளைய முல்லைத்தீவு” என்ற தன்னார்வ சமூகநேய அமைப்பின் தலைவருமான கமலநாதன் விஜிந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
திரு.லுக்ஸ் அண்ணன் என அழைக்கப்படும் திரு சின்னத்துரை இலக்ஸ்மணன் அவர்கள் தமிழர்களின் வாழ்வியலில் அக்கறையுடன் செயற்பட்டு தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றத்தை கல்வியால் மட்டுமே இலக்கை நோக்கி பயணிக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு பாடுபட்டவர், பாடுபட்டு வருபவர். தேசியத்தின் கல்விக் கழகத்தின் ஆணிவேராக நின்று செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லுக்ஸ் அண்ணன் என அன்புடன் அழைக்கப்படும் சின்னத்துரை இலக்ஸ்மணன் புங்குடுதீவில் பிறந்து சுவிஸில் வாழ்ந்த போதிலும் சமூகநலத் தொண்டில் தன்னார்வமுடன் செயற்படுபவர். குறிப்பாக தமிழ் கல்விச்சேவையின் முக்கியமாக தாயக செற்பாட்டாளர்களில் ஒருவராகவும், சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் பொருளாளராகவும், மற்றும் பல்வேறு சமூக, மக்கள் நலத் தொண்டிலும், தன்னார்வமுடன் செயல்படுபவர்.
இதேவேளை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” செயற்பாடுகளை சமூகவலைத் தளங்களில் பார்வையிட்ட இவரது குடும்பத்தினர், இவரது பிறந்தநாளை எமது மன்றத்தின் ஊடாக மக்களுக்கு வாழ்வாதார உதவி உட்பட வேறுபல உதவிகளையும் செய்யுமாறு கோரியிருந்தனர். அதேவேளை ஏற்கனவே லூக்ஸ் அண்ணன் அவர்களது பிறந்த நாளன்று அவர்களின் குடும்பத்தினர் வழங்கிய நிதிப்பங்களிப்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
.
கொரோனா தடுப்பூசி பரவலாக கிராமங்களில் போடப்பட்டு வருவதால் கோழிக் கூடு அமைக்கும் பணி சற்று காலதாமதமாகியதால் குறித்த பயனாளியான ஒட்டிசுட்டான் மாவீரன் பண்டாரவன்னியன் கிராமத்தில் வசிக்கும் திருமதி சிவரூபன் தமிழினி அவர்களுக்கு இன்றைய நாளில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கௌரவத் தலைவர் கமலநாதன் விஜிந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
பெருமழைக்கும் மத்தியில் கரைதுறைப்பற்று தவிசாளர் அவர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொண்டதுடன், ஏனைய குடியிருப்பாளர்கள் மழையினில் அறுவடை செய்யப்பட்டு காயப்போட்ட நெல்லினை பாதுகாப்பதற்காக சென்று விட்டனர். இருப்பினும் கௌரவ தவிசாளர் அவர்களே கோழிக் கூட்டினை வாகனத்திலிருந்து இறக்கி அதனை உரிய இடத்தில் வைத்து பயனாளியிடம் கையளித்து பின்னர் தனது கருத்துக்கள் தொடர்பாக உரையாற்றினார்.
கௌரவ தவிசாளர் கமலவிஜிந்தன் அவர்கள் தனதுரையில் “இவ்வாறான இடத்தை தேர்வு செய்தமைக்கு பாராட்டுகிறேன், உதவி என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம்.. அதை யாருக்கு? எங்கே? அந்த உதவியை வழங்குகிறோம் என்பதே.. எனக்கு நன்கு தெரிந்த குடும்பம் இவர்கள்”. “இதேவேளை இந்த வாழ்வாதார உதவியினை வழங்கிய லுக்ஸ் அண்ணருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மிகப் பெரிய அளப்பரிய உதவியை செய்தமைக்கு எனது மக்கள் சார்பாக நன்றியினையும் வாழ்த்தினையும் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து கொள்கிறேன்”..
“அத்தோடு சில வருடங்களாஈக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சமூகப் பணியினை முகநூல் வாயிலாகவும், இவ்வாறான செயற்பாடுகள் மூலமாகவும் அறிந்துள்ளேன்.. அற்புதமான பணிகளை செய்து வருகின்றீர்கள். இது தொடர வேண்டும் என இறையருளை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
இதேவேளை இனிய பிறந்த நாளைக் கொண்டாடும் லுக்ஸ் அண்ணன் அவருக்கு தாயக உறவுகளோடு இணைந்து, இனிய சந்தோசமான பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறுவதோடு, வாழ்வாதார உதவி மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமைக்கான நன்றியினையும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.08.2021
சுவிஸ் லுக்ஸ் அண்ணனின் பிறந்த நாளில், கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1