;
Athirady Tamil News

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” இன்றைய விசேட கூட்டம்.. & நிர்வாகக் குழு விபரம்..

0

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” இன்றைய விசேட கூட்டம்.. & நிர்வாகக் குழு விபரம்..
###############################
மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் விசேட கூட்டம் வட்சப் குழுமத்தின் ஊடாக இன்று 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்களது தலைமையில் கூடியது.

தாயகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்கின்ற சூழ்நிலை காரணமாக ஒருமித்த நேரத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபையினர் அனைவரும் ஒரே நேரத்தில் பங்குபற்ற முடியாமல் இருந்தாலும் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒவ்வொருவராக இணைந்து கொண்டனர்..

இன்றைய நாளில் தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சுவிஸ்ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற மாணிக்கதாசன் நற்பணி மன்ற இணைய (வட்சப்) குழுமத்தின் தொடக்க கலந்துரையாடலில் கனடாவிலிருந்து இயக்குனர் சபை உறுப்பினர்களான திரு குணராஜா உதயராஜா, சுவிஸ் நாட்டிலிருந்து ராஜூ என அழைக்கப்படும் திரு சுபாஸ்கரன், (வேலை நிமித்தம், சில நிமிடங்கள் மட்டும்) திரு றமணன் (சுவிஸ்), தாயகத்திலிருந்து உப தலைவர் திரு திருக்கேஸ்வரன் சுஜீவன், பொருளாளர் செல்வி. செல்வராஜா றம்மியா, நிர்வாக சபை உறுப்பினரும் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திருமதி நவரத்தினம் பவளராணி, யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.விமல் ஆகியோருடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் மாணிக்கம் ஜெகன் அவர்களும் கலந்து கொண்டார்கள்..

அத்துடன் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக திருமதி கனேஸ்குமார் கிறேஸ் அவர்கள் முன்மொழியப்பட முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளராக திரு கந்தபிள்ளை விஜிதன் தெரிவு செய்யப்பட்டார். மேலதிகமாக நிர்வாக சபை உறுப்பினராக திரு ஞானசேகரன் குணநீதன் அவர்களை பொருளாளர் செல்வி றம்மியா செல்வராஜா முன்மொழிந்தார்.

மௌன வணக்கத்துடன் தொடங்கப்பட்ட வட்சப் கலந்துரையாடலில் இணைந்திருக்கும் அனைவரும் தங்களை முதலில் அறிமுகம் செய்து கொண்டனர்.

இன்றைய விசேட கலந்துரையாடலின் நோக்கத்தினையும் தன்மையினையும் தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சுவிஸ்ரஞ்சன் மிகத் தெளிவாக தனது ஆரம்ப உரையின் போது தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செயலாளரினால் இதுவரை நடைபெற்ற கல்வி, வாழ்வாதார. உதவித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கூறினார்.

இதன் போது உதவித்திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் விடயங்கள் தொடர்பாக குழுநிலைக் கலந்துரையாடல் நடைபெற்றது முடிவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக நடைமுறைப் படுத்தப்படும் சகல நடவடிக்கை தொடர்பாகவும் முழு விபரங்கள் அதாவது உதவி வழங்கியோர், யாருக்கு யாரால் வழங்கப்பட்டது? வழங்கப்பட்ட உதவியின் விபரம்? அதன் பெறுமதி? பெற்றுக் கொண்டோர் ஒப்பம்? அதன் விலை விபரம்? என முழுத் தகவல்கள் அடங்கிய பதிவுகள் பேணப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

வாழ்வாதார உதவியாக வழங்கப்படும் கோழிக்கூடு தொடர்பாக மூன்று அளவுகள் தெரிவு செய்யப்பட்டது- 6*6..6.8..8+8 என்ற அளவுகளில் ஒரே இடத்தில் கேள்விகோரல் ஒப்பந்தத்தினால்..முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

இவ்வேளையில் சேவையிலிருந்து கலந்து கொண்ட இயக்குனர் சபை உறுப்பினரான ராஜூ என அழைக்கப்படும் திரு சுபாஷ்கரன் அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயற்பாட்டினை வெகுவாக பாராட்டிப் பேசினார். அத்தோடு எல்லைக் கிராமத்தை தேர்ந்தெடுத்து சாதி, இனம், மொழி என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உதவிகள் வழங்க வேண்டும் என கூறியதோடு விரைவில் பல இலட்சம் உதவித் தொகையில் பல வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம் தொடர்பாக நன்கொடையாளர்கள் தன்னுடன் கதைத்திருப்பதாக தெரிவித்தார்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றம் பதிவு தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது, பதிவு தொடர்பாக போசகர் திரு கதிரவேலு கேதீஸ்வரன் அவர்கள் உதவி செய்வதாகக் கூறி உள்ளதையும் பொருளாளர் செல்வி.ரம்மியா செல்வராஜா தெரிவித்தார். தற்போதைய கொரோனா பயணத்தடை முடியும் எதிர்வரும் 30 ஆம் திகதியன்று யாப்பு, வருட மாதாந்த அறிக்கை, மற்றும் கணக்கறிக்கையுடன் பிரதேச சமூகசேவை உத்தியோகத்தரிடம் கையளிக்க செயலாளர் ஒப்புக் கொண்டார்.

நிர்வாக சபையின் வட்சப் குழுமத்தில் அனைவரும் பதிவேற்றம் செய்யும் வகையில் இருந்தால் நல்லது என உபதலைவர் திரு.சுஜீவன் கேட்டுக் கொள்ள அவ்வாறு ஏன் செயற்படுத்தவில்லை? என்பது பற்றி தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் திரு.சுவிஸ்ரஞ்சன் விரிவாக எடுத்துக் கூறினார்.

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வெளிநாட்டுக் கிளைகளை ஏற்படுத்தி விரிவுபடுத்தினால் எதிர்காலத்தில் சிறப்பான நடவடிக்கையினை மேற்கொள்ள வசதியாயிருக்கும் என இயக்குனர் சபை உறுப்பினர் திரு.சுபாஷ்கரன் அவர்கள் கூறினார்.

“தற்போது தான் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயற்பாடுகளை ஆரம்பித்து உள்ளோம் அகலக்கால் இப்போதைக்கு வேண்டாம், போகப் போக இதனை நடைமுறைப்படுத்தலாம் என்றார் இயக்குனர் சபை உறுப்பினர் திரு.உதயராஜா தெரிவித்தார்.

முடிவாக கூட்டத்தின் நடப்பு நேரம் குறிக்கப்பட்ட நேரகால அவகாசத்தில் நடை பெற வேண்டும் என உப தலைவர் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக செயலாளர் தனது நன்றியுரையில் “சிறப்பாக கலந்துரையாடல் கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற விடயங்கள் ஆரோக்கியமானவை, தவறுகளை திருத்தி எதிர்கால செயற்பாட்டினை உறுதியாக முன்னெடுப்போம்., அதுவரை இன்றைய வட்சப் குழுமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளர் என்ற வகையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அத்துடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக கட்டமைப்பின் விபரத்தினையும் வெளியிட்டார்..

“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”.. நிர்வாக கட்டமைப்பு-.

போசகர்..
திரு.கதிரவேலு கேதீஸ்வரன்.. வவுனியா

தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர்.
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ் ரஞ்சன்) சுவிஸ்.

§§§§ இயக்குனர் சபை §§§§
திரு.குணராஜா உதயராஜா…. கனடா
திரு.சுபாஷ்கரன்.. (ராஜு) சுவிஸ்
தோழர்.கோபி… (ராஜு) அமெரிக்கா
தோழர். ரமணன்… சுவிஸ்

தலைவர்..
திரு.எஸ்.கே.சண்முகலிங்கம்.. (முன்னாள் அதிபர்) யாழ்.புங்குடுதீவு.

உப தலைவர்
திரு.தி.சுஜீவன்.. தோணிக்கல் வவுனியா

ஒருங்கிணைப்பு செயலாளர்.
திரு.மாணிக்கம் ஜெகன் -வவுனியா

உப செயலாளர்.
திருமதி.பெரியண்ணன் பரிமளா. வவுனியா சிவபுரம்

பொருளாளர்.
செல்வி. செல்வராஜா றம்மியா.. யாழ்ப்பாணம்

நிர்வாக சபை உறுப்பினர்கள்.

திரு.பெருமாள் சஞ்ஜீவன்.. வவுனியா சிதம்பரபுரம்

திருமதி புவனேந்திரசர்மா நாகரதி.. வவுனியா வடக்கு புளியங்குளம்

திருமதி நவரத்தினம் .பவளராணி.. வவுனியா நெளுக்குளம்

மாவட்ட இணைப்பாளர்கள்.

யாழ்ப்பாணம்.. திரு.மயில்வாகனம் விமலதாஸ் (விமல்)
கிளிநொச்சி.. திருமதி கனேஸ்குமார் கிறேஸ்
முல்லைத்தீவு.. திரு.கந்தப்பிள்ளை வஜிதன்.
வவுனியா.. திருமதி.நவரத்தினம் பவளராணி

(§§ மேலதிகமாக மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம், தென்னிலங்கை போன்ற பிரதேசங்களிலும் உடனடியாக மாவட்ட இணைப்பார்களை, இணைக்க உள்ளோம்..)

சரியாக மாலை 03,00 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் மாலை 05 மணி 40 நிமிடத்துடன் நிறைவுக்கு வந்தது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..,
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

22.08.2021

You might also like

Leave A Reply

Your email address will not be published.