சிறுநீரகம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு, வீட்டுக்கான கூரைத்தகரங்கள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)
சிறுநீரகம் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு, வீட்டுக்கான கூரைத்தகரங்கள் வழங்கல்.. (படங்கள் வீடியோ)
###################################
அச்சுவேலியைச் சேர்ந்த அமரர் மாதர் செல்லத்துரை அவர்கள் நினைவாக ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு அன்னாரின் மகளான சுவிஸ்வாழ் பேர்ண் தூண் மாநிலத்தில் வசிக்கும் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் (ராஜு) அவர்களது நிதிப்பங்களிப்பில் வவுனியா கற்குளம் நான்கில் இரண்டு சிறுநீரகமும் பழுதடைந்த நிலையில் வசிக்கும் முன்னாள் போராளியான சிவசோதி என்பவருக்கு அவர் தனது நோய் காரணமாக வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மனைவியான திருமதி சிவசோதி லட்சுமி அவர்களிடம் வீட்டுக்கான கூரைத் தகரங்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றதினால் வழங்கி வைக்கப்பட்டது.
முன்னதாக கொரோனா இடர்கால உலருணவுப் பொதி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் தொடர்ச்சியாக வழங்கும் போது குறிப்பிட்ட கிராமத்திற்கு வழங்கும் சந்தர்ப்பத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் தனது வீட்டின் நிலையினை காட்டி வீடியோ பதிவில் வீட்டுக்கான கூரைத் தகரங்களை தந்துதவுமாறு உதவி கேட்டிருந்தார்.அந்த வீடியோ பதிவு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வட்சப் குழுமத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட போது பலரும் இவ்விடயத்தில் அக்கறை எடுத்து பிரதம அமைப்பாளரோடு உரையாடிய போது..,
சுவிஸ்வாழ் திருமதி கேமேஸ்வரி சுபாஸ்கரன் அவர்கள் தனது தந்தையார் அமரர் மாதர் செல்லத்துரை அவர்கள் நினைவாக ஆடி அமாவாசை விரத நாளை முன்னிட்டு முன்னாள் போராளி குடும்பத்திற்கும் மற்றும் வடைக் கடை நடாத்தி வரும் திருமதி சுப்பிரமணியம் முத்துலட்சுமி அம்மாவுக்கும் கூரைத் தகரங்களை வழங்க முன்வந்து நிதிப்பங்களிப்பை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வழங்கியிருந்தார்.
அதன்படி அன்றைய “ஆடிஅமாவாசை” நாளில் குறிப்பிட்ட கற்குளம் நான்கில் வசிக்கும் முன்னாள் போராளி சிவசோதியின் மனைவியான திருமதி லட்சுமி சிவசோதி என்பவரிடம் வீட்டுக்கான கூரைத் தகரங்கள் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கற்குளம் வாழ் பொது மக்கள் கலந்து கொண்டனர் அத்தோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் உப தலைவரும் சமூக ஆர்வலருமான பெருமாள் சஞ்சீவனும் கலந்து கொண்டு நிகழ்வினை நடாத்த உதவி செய்தார்.
வீட்டுக்கான கூரைத் தகரங்களை பெற்றுக் கொண்ட குடும்பத் தலைவியான திருமதி சிவசோதி லட்சுமி அவர்கள் தனது நிலைமையினை பார்த்து உதவி செய்த சுவிஸ்வாழ் கேமேஸ்வரி அவர்களுக்கு தனது கணவரின் நிலமையினை கூறி நன்றி கூறும் போது அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழ ஆரம்பித்து கண்ணீராலே நன்றி கூறினார்.
தற்போதைய நிலையில் முன்னாள் போராளியான சிவசோதி அவர்களின் மருத்துவ அறிக்கையானது நம்பிக்கை தகர்ந்து போன நிலையில் இவ்வாறான உதவி கிடைத்திருப்பது கண்ணீரால் நன்றி சொல்லும் உண்மை நிலையே உருவாகும். தடுப்பில் தனக்கு தவறான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதாலேயே இவ்வாறான நோய் தனக்கு வந்திருப்பதாக சிவசோதி அவர்கள் நம்புகிறார். எது எப்படி இருப்பினும்..ஒரு முன்னாள் போராளி குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக கூரைத் தகரம் வழங்க நிதிப்பங்களிப்பு செய்த சுவிஸ்வாழ் திருமதி கேமேஸ்வரி சுபாகரன் அவர்களுக்கு தாயக உறவுகளின் சார்பில் பெருமதிப்புக்குரிய நன்றியை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்கிறது.
இதேவேளை கொடுக்கப்பட்ட வீட்டுக் கூரைக்கான தகரங்கள், வீட்டுக்கு போடுவதற்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளவிருந்த சூழ்நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளரான சிறுநீரக நோயாளிக்கு திடீரென வருத்தம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்பட்டதினால் கொடுக்கப்பட்ட கூரைத் தகரங்கள் வீட்டுக்கு போட முடியாத நிலை காணப்பட்டது.. இருப்பினும் குறித்த உதவி பெற்ற குடும்பத் தலைவி வைத்தியசாலையிலிருந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கு வீடியோ பதிவின் மூலம் தனது நிலமையினை விளக்கமாக கூறியிருந்தார்.
அந்தவகையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய உடன் கொடுக்கப்பட்ட கூரைத் தகரங்கள் வீட்டுக்கு போடப்பட்டதை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் செயலாளருக்கு தெரியப்படுத்தினார்.
உடனே அதனைப் பார்வையிட்டது மட்டுமல்லாமல் ஏற்கனவே மேலதிகமாக பழுதடைந்த வீட்டுக் கூரைத் தகரங்களில் சிலவற்றை மாற்றிக் கொடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பு இயக்குனர் உத்தரவிட்டார்.. நாட்டில் நிலவும் அசாதாரண நிலமைகள் சீரடைந்ததும் அவற்றுக்கான நடவடிக்கையினை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் முன்னெடுக்கும்..
அதேநேரம் இவ்வுதவியினை வழங்கியவர்களுக்கு நன்றி கூறுவதோடு அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்தி அமைதி வாழ்வுக்காக இறைவனை வேண்டுகிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
30.08.2021
அமரர் மாதர் செல்லத்துரை அவர்களின் நினைவாக, ஆடி அமாவாசை உணவு வழங்கல்.. (வீடியோ படங்கள்)
வயோதிப நிலையில் வடைக்கடை நடாத்தும் அம்மாவுக்கு, கூரைத் தகரங்கள் வழங்கல்.. (வீடியோ படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1