சுவிஸ் “தயா சசி” தம்பதிகளின் திருமண நாளில், தாயக உறவுகளுக்கு விசேட மதியவுணவு வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள்)
சுவிஸ் “தயா சசி” தம்பதிகளின் திருமண நாளில் தாயக உறவுகளுக்கு விசேட மதியவுணவு வழங்கி வைக்கப்பட்டது.. (படங்கள்)
#################################
சுவிஸ் வாழ் தாயக சொந்தங்களான திரு.திருமதி தயாபரன் சசிகலா தம்பதிகளின் இருபதாவது திருமண நாள் இன்றாகும். இந்நாளை முன்னிட்டு தயா சசி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு விசேட மதிய சமைத்த உணவு பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
சுவிஸ்வாழ் தமிழுறவான வவுனியாவை சேர்ந்த திரு.தயா சரவணையை சேர்ந்த திருமதி.சசி தம்பதிகள் இன்றைய நாளில் தமது இல்லற வாழ்வின் இனிய இருபதாவது நிறைவு நாளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக உறவுகளோடு விசேட மதிய உணவு வழங்கி கொண்டாடுகிறார்..
தமது இருபதாவது திருமண நாளினைக் கொண்டாடும் திரு.திருமதி தயாபரன் சசிகலா தம்பதிகள் தமது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் தாயக விடுதலைப் போராட்டத்தில் தனது கண்களை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், உடல் வலுவற்ற நிலையில் வாழ்ந்த ஒருவரை திருமணம் செய்து மிகவும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக சிறுகடைக்குரிய பொருட்கள் வழங்கி வைக்கும்படி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டனர்..
மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள போதும் நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ள நிலையில் முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு வழங்கப்பட இருந்த வாழ்வாதார உதவியாக சிறுகடைக்குரிய பொருட்கள் நாட்டின் நிலமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த உதவி குறித்த பயனாளிக்கு வழங்கப்படும்.
இருப்பினும் திரு.திருமதி. தயா சசி தம்பதிகளின் இன்றைய இருபதாவது திருமண நாளில் “கிராமத்தில் வாழும் உறவுகளுக்கும், வீதிகளில் யாசகம் பெற்று வாழும் உறவுகளுக்குமான” விசேட சமைத்து பொதி செய்யப்பட்ட உணவு வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மிகவும் கவனமாக கையாண்டு சுகாதார வழிமுறைகளை கவனத்திற் கொண்டே அனைத்து நடவடிக்கைகளையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் செய்து வருகின்றது.. “மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக” சமூகப் பணியினை வழங்கி வரும் புலம்பெயர் சமூகம் இதனை நன்குணரும் என நாம் நம்புகின்றோம்..
அந்தவகையில் இன்றைய நாளில் இருபதாவது திருமண மங்கல நாளினைக் கொண்டாடும் திரு.திருமதி. தயாபரன் சசிகலா தம்பதிகள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளர்கவென மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு வாழ்த்துவதோடு மதிய சிறப்பு உணவுக்கான நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும் வாழ்த்துவதோடு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
02.09.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1