திருநெல்வேலி அமரர் பொன்னுத்துரை அவர்களின் முப்பத்தியோராம் நாள், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (வீடியோ படங்கள்)
திருநெல்வேலி அமரர் பொன்னுத்துரை அவர்களின் முப்பத்தியோராம் நாள், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (வீடியோ படங்கள்)
##################################
யாழ் திருநெல்வேலியை பூர்வீகமாக் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஏழைத் தாயொருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கி நினைவு கூறப்பட்டது.
ஏற்கனவே அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களது அன்புப் பேரனான கனடாவில் வசிக்கும் திரு தீபன் ஸ்ரீதரன் அவர்களது முழுமையான நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்காக விசேட மதிய உணவு வழங்கி அன்னாரின் 31 ஆம் நாள் நினைவு தினம் அன்றே அனுஸ்டிக்கப்பட்டு, தாயக கிராமமொன்றில் விசேட பூசை வழிபாட்டுடன் தானம் வழங்கி உணர்வுப்பூர்வமாக “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால்” விசேடமாக அனுஸ்டிக்கப்பட்டது அறிந்ததே.
யாழ் திருநெல்வேலியை வாழ்விடமாக கொண்டு அமரத்துவமடைந்த அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் நினைவாக கனடாவில் வசிக்கும் அன்னாரின் பேரன் திரு.தீபன் ஸ்ரீதரன் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் நாவலர் வீதி சமயபுரம் வவுனியா என்னும் முகவரியில் கணவரை இழந்து பிள்ளைகளுடன் வசிக்கும் திருமதி. கிருஸ்னப்பிரபு கங்காதேவி.என்பவருக்கு இன்று (09.10.2021) வாழ்வாதார உதவியாக கோழிக் கூடு வழங்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று தொடர்பாக பயணத்தடை ஊரடங்கு நிலமை நாடெங்கிலும் அமுல்படுத்தப்பட்ட நேரத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்ட போது சமயபுரம் நாவலர் வீதியில் வசிக்கும் கணவரை இழந்து பிள்ளைகளோடு வசிக்கும் திருமதி கிருஸ்ணப்பிரபு கங்காதேவி என்பவருக்கு இன்றைய நாளில் அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் நினைவாக மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
அமரத்துவமடைந்த கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் நினைவாக அன்னாரின் கனடாவில் வசிக்கும் பேரன் திரு தீபன் ஸ்ரீதரன் அவர்களின் குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு நடராசா குணரட்ணம் செயலாளர் திரு பாலசிங்கம் பாலகுலசிங்கம், சமயபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் மற்றும் கமக்கார அமைப்பு ஆகியவற்றின் செயலாளர் திரு.கனகராஜா சாந்தகுமார் ஆகியோருடன் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் உப செயலாளர் திருமதி பெரியண்ணன் பரிமளா, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திருமதி நவரத்தினம் பவளராணி ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வின் தொடக்கத்தில் நிதிப் பங்களிப்பு செய்தோர் விபரங்கள் அடங்கிய பெயர்ப்பலகையினை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரைநீக்கம் செய்து வைக்க கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட கோழிக் கூட்டினை திறந்து வைக்க.. சமயபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் செயலாளர் கனகராஜா சாந்தகுமார் கணவரை இழந்து பிள்ளைகளுடன் வசிக்கும் பயனாளியான கிருஸ்ணப்பிரபு கங்காதேவி கோழிகளை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வாழ்வாதார உதவி வழங்கள் நிகழ்வுக்கு வருகை தந்தோர் கோழிகளை கூட்டுக்குள் வைத்தனர்.. தொடர்ந்து கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் உரையாற்றினார் “குறிப்பாக சரியான இலக்கினைத் தேடி பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து வாழ்வாதார உதவியினை வழங்கியுள்ளீர்கள் நல்ல விடயம்” என பாராட்டினார் .
அவ்வாறே ஆலயத் தலைவரும் “வாழ்வாதார உதவி வழங்கியோர் எமது கிராமத்தை தெரிவு செய்து பொருளாதார நிலையில் மிகவுடன் வறிய நிலையில் வசித்து வரும் குடும்பத் தலைவிக்கு வழங்கிய மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும், நிதிப்பங்களிப்பு செய்த கனடாவாழ் தமிழுறவான திரு ஸ்ரீதரன் அவர்களுக்கும் தனதும் பயனாளி சார்பாக நன்றியினைத் தெரிவித்தனர்.
முடிவாக வாழ்வாதர உதவியினை பெற்றுக் கொண்ட திருமதி கங்காதேவி அவர்கள் இவ்வுதவியினைத் தந்த அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
முடிவாக அமரர் கணபதிப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின் ஆத்மசாந்திக்காக இறைவனை வேண்டுவதோடு நிதிப்பங்களிப்பு செய்த கனடா வாழ் ஸ்ரீதரன் அவர்களுக்கும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவிக்கும் அதேவேளை எல்லோருக்குத் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
09.10.2021
அமரர் க.பொன்னுத்துரை அவர்களது 31 ஆம் நாள் நினைவு தினம், தாயகத்தில் அனுஸ்டிப்பு.. (படங்கள்)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1