தெல்லிப்பழையில் பதிவானது அதிகூடிய மழைவீழ்ச்சி!!
நேற்றுச் சனிக்கிழமை(30.10.2021) காலை-08.30 மணி தொடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.10.2021) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 152.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.
குறித்த காலப் பகுதியில் அச்சுவேலியில் 99.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், பருத்தித்துறையில் 71. 1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 69.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாகவும், நயினாதீவில் 64.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இலங்கையை அண்மித்த பகுதியில் குறைந்த காற்றழுத்த நிலை காணப்படுவதால் இன்றும் யாழ்.மாவட்டத்தில் ஓரளவு மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது அதிகரித்து வீசக் கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் கடற்தொழிலாளர்களும், மீனவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறும் திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”