;
Athirady Tamil News

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு!! (படங்கள்)

0

நவாலி வீதியோரத்தில் உள்ள மரத்தை இன்று வெட்டும் நிலையில், அவ்விடத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி ஊடாக காரைநகர் செல்லும் வீதியின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்காக வீதியோரத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த குறித்த மரத்தை வெட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் அந்த மரத்தை வெட்டுவதற்கு வந்துள்ளனர்.

இதனை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் ஒருசிலர் மரத்தை வெட்ட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால், குறித்த மரத்தை வெட்டாமல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் திரும்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் பெரும்பாலானோர் ஒன்றுகூடி, வீதி அபிவிருத்திக்காக மரத்தை வெட்ட வேண்டுமாறு கூறி யாழ். மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மரத்தை இன்று வெட்டுமாறு அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில், மரம் வெட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆகையால், அப்பகுதியில் வன்முறைகள் ஏற்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.