கோவேக்சின் தடுப்பூசியின் பயன்பாட்டு காலம் 12 மாதமாக அதிகரிப்பு…!!!
இந்தியாவில் சீரம் இன்டிஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. இந்த தடுப்பூசி இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து கண்டுபிடித்தது.
இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் கோவேக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்ததுடன் உற்பத்தியும் செய்து வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளிலும் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தடுப்பூசியை கண்டுபிடிக்கும்போது, கோவேக்சின் மருந்தின் பயன்பாட்டு காலம் தயாரிப்பு தேதியில் இருந்து ஆறு மாதங்களாக இருந்தது. மருந்து 2 முதல் 8 டிகிரி வெப்ப நிலையில்தான் இருக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவேக்சின் தடுப்பூசி மருந்து பயன்படுத்த முடியாது. வீணாகிவிடும்.
கோப்புப்படம்
இதனால் பயன்பாட்டு காலத்தை 24 மாதங்களுக்கு நீட்டிக்க பாரத் பயோடெக், கூடுதல் நிலைத்தன்மை தரவுகளுடன் இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தது.
இந்த நிலையில், கோவோக்சின் பயன்பாட்டு காலத்தை 6 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் கோவிஷீல்டின் பயன்பாட்டு காலம் 6 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. தற்போது 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.