பூஸ்டர் டோஸை ஏன் பெற வேண்டும்?
பூஸ்டர் டோஸ் கொவிட் தொற்றின் தீவிரத்தினை 92% குறைக்கும். கொவிட் தொற்றினால் ஏற்படும் இறப்பு வீதத்தினை 81% குறைக்கும். பூஸ்டர் தடுப்பூசியினைபெற்றவர்களில் வைத்தியசாலைக்கான அனுமதி 93% குறைவடைகின்றது என மருத்துவர் . சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
எனவே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பூஸ்டர் டோஸினை சுகாதார உத்தியோகத்தர்கள் அனைவரும் சந்தர்ப்பத்தினை தவற விடாது பெற்றுக் கொள்ள வேண்டும்.
அடுத்து கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செயற்றிட்டம் வயதானவர்களுக்கும் ஏனைய நாட்பட்ட நோயுடையவர்களுக்கும் இன்றியமையாதது ஆகும்.
எனவே கொவிட் பூஸ்டர் தடுப்பூசியினைபெறுவதற்குச் சந்தர்ப்பம் உடையவர்கள் இதனை நழுவ விடாமல் தடுப்பூசியினை அச்சமில்லாது பெற்றுக் கொள்ள வேண்டும். யாழ் போதனா வைத்தியசாலையில் மூன்றாவது தடுப்பூசியினை இதுவரை 30% மட்டுமே பெற்றுள்ளனர். ஏனையவர்களும் இதனை பெற்றுக் கொள்ள முன்வரல் வேண்டும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”