;
Athirady Tamil News

தீபாவளி முடிந்து 2 நாள் ஆகியும் புகைமூட்டம் நீடிப்பு- டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்…!!

0

தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி தொடங்குவதற்கு முன்பே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. தீபாவளிக்கு பிறகு இன்று காலை 6 மணி நிலவரப்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது என்றும், காற்றின் தரக் குறியீடு 533 ஆக உள்ளதாகவும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லியை ஒட்டி உள்ள நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் கிரேட்டர் நொய்டாவிலும் காற்று மாசு அதிகமாக இருந்தது. நாளை மாலை முதல் காற்றின் தரம் ஓரளவு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி முடிந்து 2 நாட்கள் ஆகியும் டெல்லி மற்றும் டெல்லியை சுற்றி உள்ள நகரங்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால் வாகனங்களை ஓட்டிச் செல்வது கடும் சிரமமாக உள்ளது.

காற்றின் தரத்தை பொருத்தவரை தரக்குறியீடு 50 இருந்தால் நல்லது என்றும், 50 முதல் 100-க்குள் இருந்தால் திருப்திகரமானது என்றும், 101 முதல் 200-க்குள் இருந்தால் மிதமானது என்றும், 201-ல் இருந்து 300-க்குள் இருந்தால் மோசமானது என்றும் 301-ல் இருந்து 400-க்குள் இருந்தால் மிக மோசமானது என்றும், 401-ல் இருந்து 500-க்குள் இருந்தால் கடுமையானது எனவும் கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.