இளம் பெண் கடத்தல் தெல்லிப்பழையில் சம்பவம்!!
ஹைஏஸ் வாகனத்தில் வந்தவர்களால் இளம் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(06) காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர்.
தெல்லிப்பழை மருத்துவமனையில் பணிபுரியும் குறித்த இளம் பெண் தனது சகோதரனது மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சகோதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது . சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”