;
Athirady Tamil News

சுவிஸ் தர்சீஸ் மற்றும் அவரது தாயார் திருமதி குகா ஆகியோரின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

சுவிஸ் தர்சீஸ் மற்றும் அவரது தாயார் திருமதி குகா ஆகியோரின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
################################

சுவிசில் வசிக்கும் தர்சீஸ் மற்றும் அவரது தாயாரான வேலாயுதம் அவர்களின் மகளுமான குகா இருவரின் பிறந்த நாள் நிகழ்வினை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தாயக உறவுகளோடு இனிதே கொண்டாடப்பட்டது தெரிந்ததே.

அவ்வாறே ஐந்து தினங்களுக்கு முன்பாக செல்வன்.தரசீஸ் அவரது தாயாரான திருமதி.குகா ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக கிளிநொச்சியில் வாழும் பலதரப்பட்ட தேவையுடைய குடும்பங்களை தெரிவு செய்து அவர்களுக்கு தீபாவளித் திருநாளை கருத்திற் கொண்டு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

“மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமநி.கனேஸ்குமார் திரேஸ் அவர்களால் திருநகர், அம்பாள் குளம், வட்டக்கச்சி, உதயநகர், கனகபுரம், செல்வாநகர் ஆகிய கிராமங்களில் வாழும் வயோதிபக் குடும்பங்கள், விசேட தேவையுடைய குடும்பங்கள், மிகவும் வறிய நிலையில் வாழும் குடும்பங்கள், கணவரை இழந்து தனித்து வாழ்வோர் குடும்பங்கள், மற்றும் நிரந்தர நோயாளர் குடும்பங்கள், என பலதரப்பட்ட தேவைகளுடைய குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சுவிஸ் தரசீஸ் மற்றும் குகா அவர்களது நிதிப்பங்களிப்பில் தீபாவளி சிறப்பு கொடுப்பனவாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வன்னியில் தற்சமயம் மழை காலம் தொடங்கியுள்ளதால் தெரிவு செய்யப்பட்டோர் வீடுகளுக்கு சென்று உலருணவுப் பொதி வழங்குதல் மிகவும் சிரமமாக இருந்த்தினால், ஓரிடத்தில் வரக்கூடிய குடும்பங்கள் ஒன்றுகூடி உலருணவுப் பொதிகளைப் பெற்றுச் சென்றனர்.. அதேவேளை குறிப்பிட்ட கனகபுரத்திற்கு வரமுடியாத வயோதிபர்கள் விசேட தேவையுள்ளோர் குடும்பங்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று உலருணவுப் பொதிகள் மாவட்ட இணைப்பாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

“மிகவும் இக்கட்டான நிலையில் வாழும் இந்த நேரத்தில் இவ்வாறான உலருணவுப் பொதி கிடைத்தது.மிகப் பெரிய உதவி.. இவ்வாறான உதவிகள் எங்கள் கிராமங்களுக்கு கிடைப்பது குறைவு.. ஆனால் நீங்கள் எங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து தருகின்றீர்கள்.. இடப்பெயர்வுக்கு பின் பலதரப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளுக்குநாள் கூடிக்கொண்டு வருகின்றார்கள்.. ஏன் இப்படி நடக்குதென்டு தெரியவில்லை.. சிறுவயது திருமணங்கள் கூடியுள்ளது.. யார் எவர் என தெரியாமல் சட்டரீதியற்ற திருமணங்களும், பிரிவுகளும் சாதாரணமாக நடக்குது.. வேலை இல்லை.. இப்படி நிறைய பிரச்சினைகள் மத்தியில் வாழும் எங்களைத் தேடி வந்து உதவி செய்த மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திற்கும் பிறந்த நாளைக் கொண்டாடும் அம்மாவும் பிள்ளையுமான திருமதி குகா மற்றும் தர்சீஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் மனமுவந்த நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்” என உலருணவுப் பொதிகளை பெற்றுக் கொண்டவர்கள் சார்பாக ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறாக வேலாயுதம் அவர்களின் மகளான சுவிசில் வாழும் திருமதி குகா, திருமதி குகா அவர்களின் மகன் தர்சீஸ் ஆகியோரின் பிறந்த நாள் நிகழ்வானது அவர்களது நிதிப்பங்களில் வவுனியாமற்றும் கிளிநொச்சி மாவட்ட கிராமங்களில் பலதரப்பட்ட சமூகநலப் பணிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் முன்னெடுத்து நிறைவேற்றியது.

திருமதி குகா, செல்வன் தரசீஸ் ஆகியோருக்கு தாயக உறவுகள் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதோடு பாதிக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு நிதி வழங்கி பல்வேறு உதவிகளை வழங்கியமைக்காக மாணிக்கதாசன் நற்பணி மன்றம் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

09.11.2021

சுவிஸ் தர்சீஸ் அவர்களின் பிறந்தநாள் அமைதியாக கொண்டாடப்பட்டது. (படங்கள்)

கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுவிஸ்வாழ் திருமதி குகா அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு.. (படங்கள்)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.