பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள்…!!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசனுடன் கலந்துரையாடியதற்கு அமைவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரும் பிரதேச செயலகங்களில் உள்ள அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் மற்றும் பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள் ஆகியோர் இணைந்து பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்மைவாக, 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவில் 24 குடும்பங்களைச் சேர்ந்த 94 நபர்களும், தெல்லிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப்பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 27 நபர்களும், பருத்தித்துறை பிரதேச செயலகப்பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 128 நபர்களும், நல்லூர் பிரதேச செயலகப்பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 05 நபர்களும், நல்லூர் பிரதேச செயலகப்பிரிவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 நபர்களும், இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மொத்தம் 131 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குரிய சமைத்த உணவுகளும், வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை 6,610 குடும்பங்களைச் சேர்ந்த 21,799 நபர்கள் மக்கள் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.