சுவிஸ் “தயா,சசி” திருமண நாளினை முன்னிட்டு, கிளிநொச்சியில் போராளிகள் தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
சுவிஸ் “தயா,சசி” திருமண நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் போராளிகள் தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ)
##############################
சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி தயாபரன்.சசிகலா தம்பதிகளின் இருபதாவது திருமண நாளினை முன்னிட்டு பல்வேறு சமூகநலப் பணிகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.. ஏற்கனவே இந்நாளை முன்னிட்டு தயா சசி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் தாயக உறவுகளுக்கு விசேட மதிய சமைத்த உணவு பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டது தெரிந்ததே..
இதேவேளை கிளிநொச்சியில் தாயக விடுதலைப் போராட்டத்தில் தனது கண்களை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், உடல் வலுவற்ற நிலையில் வாழ்ந்த ஒருவரை திருமணம் செய்து மிகவும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக சிறுகடைக்குரிய பொருட்கள் வழங்கி வைக்க முடிவெடுத்த போதிலும், நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக சகல நடவடிக்கைகளும் ஸ்தம்பித்துள்ள நிலையில், முன்னாள் போராளிக் குடும்பத்திற்கு வழங்கப்பட இருந்த வாழ்வாதார உதவியாக சிறுகடைக்குரிய பொருட்கள் நாட்டின் நிலமை வழமைக்கு திரும்பியவுடன் குறித்த உதவி குறித்த பயனாளிக்கு வழங்கப்படும் என்பதை பகிரங்கத்தில் அறிவித்து இருந்தோம்..
அந்த வகையில் இல.327 உதயநகர் மேற்கு உதயநகர் கிளிநொச்சி எனும் முகவரியில் வசித்துவரும் முன்னாள் போராளித் தம்பதிகளும் இறுதி யுத்தத்தில் கணவர் முற்றிலுமாக காயப்பட்டு சுயமாக இயங்க முடியாத சூழ்நிலையில் மனைவியின் இரண்டு கண்களும் பார்வை இழந்த நிலையில் மிகவும் இக்கட்டான பொருளாதார நிலையில் வாழ்ந்து வரும் திரு.திருமதி அருட்பிரகாசம் இராதிகா தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவியாக சிறுகடைக்குரிய பொருட்களை சுவிசில் வசிக்கும் திரு.திருமதி தயா,சசி தம்பதியினர் தங்களின் இருபதாவது திருமண நாளினை முன்னிட்டு இன்றைய நாளில் வழங்கி வைத்தனர்.
இன்று கிளிநொச்சி ஏ ஒன்பது பிரதான பாதையில் உள்ள மத்திய சந்தையின் தெற்கு பக்கமாகவுள்ள பிரதான பாதையின் அருகே அமைக்கப்பட்ட சிறிய அளவிலான தகரங்களால் வடிவமைக்கப்பட்ட கடையின் திறப்பு விழாவும், அதனோடு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வும் ஒருங்கிணைந்த நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தார் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி கனேஸ்வரன் கிரேசி அவர்கள்.
முன்னாள் போராளித் தம்பதிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக வழங்கப்படும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிளிநொச்சி பொதுசந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் திரு.இரா இரத்தினமணி அவர்களும் சங்கத்தின் செயலாளர் திரு.இ.குகனேஷ்வரன் அவர்களும் உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார் உட்பட பலரும் வருகை தந்திருந்தனர். அந்தவகையில் வருகை தந்த அனைவருக்கும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறித்த முன்னாள் போராளிக் குடும்பமான அருட்பிரகாகம் ராதிகா தம்பதிகளுக்கு வழங்கப்படும் வாழ்வாதார உதவி தொடர்பான பெயர்ப் பலகையினை கிளிநொச்சி பொதுசந்தை வர்த்தகர் சங்கத்தின் உபதலைவரான திரு.கறுப்பையா ஜெயக்குமார் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட, வாழ்வாதார உதவியான சிறுகடைக்குரிய பொருட்களை சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரும் இணைந்து திருமதி ராதிகா அவர்களிடம் வழங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வர்த்தகர் சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உபதலைவர் எமது மன்றத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திருமதி கனேஷ்குமால் கிறேசி ஆகியோர் இணைந்து கடையினை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்த வர்த்தக சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில் “வவுனியாவிலிருந்து மழையினையும் பொருட்படுத்தாது, பொருத்தமான வாழ்வாதார உதவியினை மிகப் பொருத்தமானவர்களுக்கு வழங்கிய மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நற்பணி, நல்ல பணிதான்.. உதவியினை பெற்றவர்களை நான் நன்கு அறிவேன், அவர்களுக்கு இந்த உதவியினை வழங்கிய தயா சசி தம்பதிகளை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்.. இப்படியெல்லாம் உதவி செய்கின்றார்கள் என்பதை நினைக்க சந்தோசமாக இருக்கிறது.. கிளிநொச்சியை பொறுத்தமட்டில் பல்வேறு தேவைகளுடைய மக்கள் உள்ளார்கள், எதிர்காலத்தில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இவ்வாறான நற்பணிகளோடு நாங்களும் பயணிக்க விரும்புகின்றோம், நேற்று வவுனியாவிலிருந்து தொடர்ச்சியான அழைப்பு எமக்கு வந்து கொண்டே இருந்த்து. இன்று காலையிலும் நேரத்திற்கே வருகை தந்து ஒவ்வொறு விடயங்களிலும் அவதானமாக செய்வதை பார்த்துக் கொண்டு இருந்தோம்.. ஒரு சமூக அமைப்பின் பணியை இன்று நாம் முழுமையாக பார்த்தோம்.. மிகவும் கடினமான பணிகளை முன்னெடுக்கும் உங்களுக்கு எமது சங்கத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
அதனைத் தொடர்ந்து உதவியினைப் பெற்றுக் கொண்ட திருமதி ராதிகா அவர்கள் “எங்கள் நிலமையினை கருத்திற் கொண்டு உதவி வழங்கிய அனைவருக்கும் குறிப்பாக தயா அண்ணன், சசி அக்கா இருவருக்கும் நன்றி” எனக் கூறினார்.
இதேவேளை குறித்த வாழ்வாதார உதவியினை வழங்கிய சுவிஸ்வாழ் தயா சசி தம்பதிகளுக்கு திருமண வாழ்த்தினை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரம் வாழ்வாதார உதவிக்கான நிதிப் பங்களிப்பினை வழங்கியமைக்காகவும் நன்றியனைத் கூறிக் கொள்கிறது.
நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..
மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
13.09.2021
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1