அதிபர்கள், ஆசியர்களின் சம்பளத்தை அதிகரிப்பு?
ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே நேரத்தில் தீர்ப்பதற்கு, 30 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
ஆசிரியர் – அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாட்டினை நீக்குமாறு கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தின் மூலம் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2021.8.30 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தினை விரைவாக செயற்படுத்துவதற்காக மேலும் ரூபா 30,000 மில்லியனை சம்பளமாக உட்சேர்ப்பதற்கு முன்மொழியப்படுகிறது.
இது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற ரூபா 109,000 மில்லியனுக்கு அதிக தொகையினை விட மேலதிக ஒதுக்கீடாகும்.
தற்பொழுது பயிலுநராக அரசாங்க சேவைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட 53,000 இற்கு அதிக பட்டதாரிகளுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்காக ரூபா 27,600 மில்லியன் செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, குறித்த முழுத் தொகையினையும் இவ் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 20,000 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 7,600 மில்லியன் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்க பணியாளர்களின் மோட்டார் சைக்கிள் கொள்வனவுக்காக 500 மில்லியனை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.