பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்!!
பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்: தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வட மாகாணப் பணிப்பாளர்
பொலிசாருக்கு எதிரான மக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வட மாகாணப் பணிப்பாளர் சீ.ஏ.மோகன்ராஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவின் வடமாகாண அலுவலகம் யாழ் மாவட்ட செயலகத்தின் 55 ஆம் இலக்க அறையில் தற்போது இயங்கி வருகின்றது. இங்கு பொது மக்கள் பொலிசாருக்கு எதிரான முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும்.
நேரடியாக அலுவலகத்திற்கு வருகை தந்து முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். அல்லது 0212222321 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதுடன், எழுத்து மூலமான முறைப்பாட்டினை கிராம அலுவலரின் மேலொப்பத்துடன் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க முடியும் எனவும், 1960 என்ற தொலைபேசி இலகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தியும் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கிராம அலுவலர் ஊடாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறும் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”