பாகிஸ்தானில் உள்ள குருநானக் பிறந்த ஊருக்கு செல்ல 8 ஆயிரம் சீக்கியர்களுக்கு அனுமதி…!!1
சீக்கிய மதத்தை தோற்று வித்த குருநானக் பிறந்த ஊர் பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள நன்கனாசாகிப் என்ற இடத்தில் உள்ளது.
அங்கு புகழ் பெற்ற குருத்துவாரா அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. குருநானக்கின் பிறந்த நாளையொட்டி சீக்கியர்கள் இந்த கோவிலுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.
இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கியர்கள் அங்கு செல்வார்கள். ஆனால் அவர்களுக்கு விசா வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஏற்கனவே சில நேரங்களில் இந்திய சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் அனுமதி தர மறுத்து இருக்கிறது.
இந்த நிலையில் குருநானக்கின் 552-வது ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புனித யாத்திரை செல்ல ஏராளமான சீக்கியர்கள் விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.
குருநானக் பிறந்த ஊருக்கு செல்ல 8 ஆயிரம் சீக்கியர்களுக்கு அனுமதி
உலகம் முழுவதும் இருந்து 8 ஆயிரம் சீக்கியர்கள் இதில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்கி உள்ளது.
ஆனால் இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. மற்ற சீக்கியர்கள் பல்வேறு நாடுகளில் வசிப்பவர்கள் ஆவர்.
இந்தியாவில் இருந்து செல்லும் சீக்கியர்கள் வாகா எல்லை வழியாக சென்று பாகிஸ்தான் செல்வார்கள். பின்னர் அங்குள்ள வாகனங்கள் மூலம் அவர்கள் கோவிலுக்கு செல்வார்கள்.