சிறில் காமினி பெர்ணான்டோ இன்று CID யில் ஆஜர்!!
அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவரை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வௌியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.