;
Athirady Tamil News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 16ல் வங்காளதேசம் பயணம்…!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வங்காளதேச பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் டிசம்பர் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கிழக்கு பாகிஸ்தானில் 1971-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் துருப்புக்களால் நடத்தப்பட்ட திடீர் ஒடுக்குமுறைக்குப் பிறகு , வங்காளதேசத்தின் விடுதலைப் போர் தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நாளை வங்காளதேசம் வெற்றி தினமாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக வங்காளதேசத்திற்கு பயணம் செய்கிறார்.

வங்காளதேசமும் இந்தியாவும் அடுத்த மாதம், இரண்டு மெகா நிகழ்வுகளை – மைத்ரி திவாஸ் (நட்பு தினம்) மற்றும் வங்காளதேசத்தின் வெற்றி நாள் – முறையே டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 16 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன.

வங்காளதேசமும் இந்தியாவும் இணைந்து டிசம்பர் 6 ஆம் தேதி மைத்ரி திவாஸைக் குறிக்கும் வகையில் லோகோ வடிவமைப்பு போட்டியை நடத்துகின்றன. இதைத்தவிர, பல்வேறு முக்கிய நிகழ்வுகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.