யாழில் எரிபொருள் கொள்வனவுக்கு மக்கள் முண்டியடிப்பு!! (படங்கள்)
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய முண்டி யடிக்கின்றனர் .சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் யாழ் மாவட்டத்தில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.
யாழ் மாவட்டத்திற்கு தேவையான போதுமான அளவு எரிபொருள் காங்கேசன்துறை எண்ணை களஞ்சியத்தில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ள நிலையிலும் பொதுமக்கள் எரிபொருளை கொள்வனவு செய்ய முண்டியடிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”