இந்தியாவில் கொரோனா நிலவரம்- 287 நாட்களில் இல்லாத அளவு சரிவு…!!!
இந்தியாவில் கொரோனா 2-ம் அலை முடிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,865 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது. இது கடந்த 287 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 4,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மொத்த பாதிப்பு 3 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் 197 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,63,852 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,971 பேர் நலம்பெற்று வீடு திரும்பினர்.
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 61 ஆயிரத்து 756 ஆக உயர்ந்தது. தற்போது 1,30,793 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 525 நாட்களில் இல்லாத அளவு குறைவு ஆகும்.
தடுப்பூசி
நாடு முழுவதும் நேற்று 59,75,469 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 112 கோடியே 97 லட்சத்தை கடந்தது.
இதுவரை மொத்தம் 62.57 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் 11,07,617 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.