தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு…!!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறையினர் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று 802 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் 12 மாவட்டங்களில் நோய் தொற்று சற்று அதிகரித்துள்ளது. மதுரையில் நேற்று முன்தினம் 7 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 13 ஆக அதிகரித்துள்ளது. தர்மபுரியில் 12 ஆக இருந்த தினசரி தொற்று 17 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று 10 மாவட்டங்களில் 1 முதல் 4 வரையில் தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
கோவையில் அதிகபட்சமாக நேற்று 123 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 77 பேருக்கும், செங்கல்பட்டில் 62 பேருக்கும், திருப்பூரில் 49 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை, கோவை தவிர பல மாவட்டங்களில் இரட்டை இலக்கு எண்களிலேயே நோய் தொற்று பதிவாகி இருக்கிறது.
அதே நேரத்தில் அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.