60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்!!
நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இன்று (17) முதல் வழங்கப்படவுள்ளது.
பூஸ்டர் டோஸாக பைசர் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸைப் பெறுபவர்கள், இரண்டாவது டோஸை பெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
இதுவரை பத்து இலட்சம் பாடசாலைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 480 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.