;
Athirady Tamil News

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!! (படங்கள்)

0

யாழ்.மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் , அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருந்தது.

காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தண்டஹ் போது , காணி உரிமையாளர்கள் , அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து , காணி அளவீட்டுப்பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.