சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை அதிகரித்துள்ளது!!
சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசங்ச தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீது நேற்று (17) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சந்தைப் பொருளாதாரம் சரிவடையும் நிலைக்கு வந்துள்ளது. கொவிட் காரணமாக நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய டொலர் இல்லாமல் போயுள்ளது. இதற்கு முகங்கொடுப்பதற்காக உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும். இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் ஏற்றுமதி வலயம் ஒன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு முதல் கடனில் தங்கியிருந்த செயல்திட்டங்களுக்கு முதலீடு செய்த அனைவரும் தற்போதைய பொருளாதார சரிவிற்கு பொறுப்புக் கூறவேண்டும். சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் கேஸின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் பல பொருட்களின் விலை மட்டமும் உயர்ந்துள்ளது. இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.