லிட்ரோ எரிவாயு நிறுவனம் வௌியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
இந்த வார இறுதியில் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாஃப் எரிவாயு உற்பத்தி தடைபட்டுள்ளதால் மிகை கேள்வியும் தங்கள் நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளமை தற்போதைய எரிவாயு தட்டுப்பாடுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
சில நாட்களாக காணப்படும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்றும் சில இடங்களில் மக்கள் வரிசைகள் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
வத்தளை, உஸ்வெட்டகேயாவ, தல்தியவத்தை எரிவாயு மிதவைக்கு எரிவாயுடன் கூடிய கப்பல் ஒன்று நேற்று வந்துள்ளதுடன், எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இந்த வாரத்தினுள் 8 இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.