202 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொரோனாவை வீழ்த்திய குஜராத் பெண்…!!
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் கீதா தர்மிக். 45 வயதான இவரது தந்தை கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி இறந்தார். தந்தையின் இறுதிச்சடங்குக்காக அவர் போபால் சென்றிருந்தார்.
ஏப்ரல் 25-ந் தேதி அன்று கீதா தர்மிக்குக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஆக்சிஜன் அளவு குறைந்ததை தொடர்ந்து தாக்கோட் ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ்
3 நாட்கள் நன்றாக இருந்தார். மே 5-ந் தேதியன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து மே 7-ந் தேதி அவர் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மே 23-ந் தேதி வரை அவருக்கு ஆக்சிஜன் மற்றும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பின்னர் கீதா மீண்டும் தாகோட் ரெயில்வே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆக்சிஜன் அளவு குறைந்திருந்தது. அவர் 2 மாதங்கள் வெண்டி லேட்டரில் வைக்கப்பட்டார். பின்னர் மற்றொரு மாதம் பீபாப் எந்திரத்தில் வைக்கப்பட்டார்.
ஒரு மாதத்திற்கு முன்பு கீதாவின் ஆக்சிஜன் அளவு கணிசமாக குறைந்தது. நோய் தொற்றுக்கு முன்பு இருந்ததை போலவே அவர் மீண்டும் நல்ல ஆரோக்கியத்தை பெற்றார்.
கீதா தர்மீக் நல்ல உடல்நிலையை பெற்றதை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். அவர் 202 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொரோனாவுடன் போராடி குணமடைந்து இருக்கிறார்.