“மாவீரர் தினம்” பெயர் மாற்றம் குறித்து, கனடிய “இனமான” தமிழ் சமூகம் விடுத்திருக்கும் கண்டன அறிக்கை..
“மாவீரர் தினம்” பெயர் மாற்றம் குறித்து, கனடிய “இனமான” தமிழ் சமூகம் விடுத்திருக்கும் கண்டன அறிக்கை..
“சிங்களத்தின் வேலைத்திட்டத்தை கனகச்சிதமாக முன்னெடுக்கும் கனடிய தமிழ் அமைப்பு” எனும் தலைப்பில் `கனடிய “இனமான” தமிழ் சமூகம்` எனும் பெயரில் இன்றையதினம் கனடாவில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை இது..
மாவீரர் மாதம்- மாவீரர் வாரம்- மாவீரர் நாள்! இவை மூன்றும் காரண காரியங்களோடு தமிழீழ தேசியத் தலைவரால் அவர் சார்ந்த தமிழின விடுதலைப் புலிகள் அமைப்பினால் குறிப்பிடப்பட்ட வரையறை செய்யப்பட்ட பதப் பிரயோக பெயர்களாகும். சராசரி மனிதன் தன் வாழ்நாளில் தன் உறவுகளையும் மறக்க நேரிடலாம், தனக்காக உதவியவனையும் மறக்கவும் நேரிடலாம். ஆனால் தன் சந்ததிக்காக உயிர்நீத்த ஒருவனை எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் மறக்க மாட்டான் இது தான் உலக யதார்த்தம்!
இத்தகைய யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, நம் தேசிய தலைவர் மேதகு திரு. வே பிரபாகரன், அவர்கள் நம் விடுதலைப் போராட்ட அமைப்பில் இணைந்து இனவிடுதலை செயற்பாட்டில் உயிர் நீத்த அனைத்து போராளிகளை மாவீரராக நினைவு கூறும் அந்த புனிதமான மாவீரர் நாளாக பிரகடனம் செய்தார்.
+
இத்தகைய பிரகடனம்தான் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலையால் மவுனித்துப் போன தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பாடுகளின் பின்னரும், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மகத்துவத்தையும் அந்த மகத்துவத்தை நிகழ்த்திய போராளிகளின் நினைவுகளையும் சிங்களத்தினதும் சிங்களத்தின், அடிவருடி நாடுகளின் தடைகளைத் தாண்டி, அவர்களின் நரித்தனமும்- ஆபத்து மிக்க அற்ப கனவுகளையும் தகர்த்து, இன்னமும் தாயகத்திலும், புலம் தேசங்களிலும் முன் நகர்த்துகிறது.
இத்தகைய முன் நகர்வை தடுத்து நிறுத்தி, தமிழர் மனங்களில் இருந்தும் “மாவீரர்” என்கிற பெரு நெருப்பினை ஊதி அணைத்து இதன் மூலம் தமிழர்களின் உயிர் கனவாகிய தமிழீழக் கனவிற்கு நிரந்தர சாவுமணி அடித்து விடலாம் என்கிற சிங்களத்தின் உத்திக்கு “கனடிய தமிழ் அமைப்பு” கொடுக்கின்ற செயல் வடிவமே மாவீரர் நாளை, “தமிழர் தேசிய எழுச்சி நாள்” எனவும் உருமாற்றுகின்ற, மடை மாற்றுகின்ற இழிவான செயலாகும்.
இந்தச் செயலை ஒட்டுமொத்த உலகத் தமிழர் நாம் ஒன்றிணைந்து முறியடித்து ஆகணும். இதுவே எங்களின் விடுதலை பெருநெருப்பு அணைந்து விடாது இருப்பதற்கு மாவீரர் பெயரால் நம் வருங்கால சந்ததிகளுக்கு கடத்துவதற்கு நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தாயக கடமையாகும்.
தமிழ் தேசியத் தலைவரால் முன்மொழிந்து, மூத்த தளபதிகளால் வழிமொழியபட்டு, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த “மாவீரர் தினம்” என்கிற அடையாளத்தை மாற்றுகின்ற உரிமையை இந்த கயவர்களுக்கு யார் கொடுத்தது? பெயர் மாற்றம் செய்வதற்கு இதுவென்ன, உனக்கு உன் அப்பன் வைத்த பெயரா?
கயவர்களே ஒன்றைமட்டும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உமக்குச் செல்ல விரும்புகிறோம்!
இந்தப் பெயர் மாற்ற துரோகத்தை உடனே நிறுத்துங்கள். இல்லையேல் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து உங்களை செயற்பாட்டு தளங்களிலிருந்து ஓட.. ஓட.. விரட்டி அடிப்போம்..
பிரசுர வெளியீடு….
தமிழ் மாணவர்கள்,
தமிழ் வணிகர்கள்,
தமிழ் ஊடகவியலாளர்கள்,..
ஒருங்கிணைந்த கனடிய “இனமான” தமிழ் சமூகம்
ஒன்றாகட்டும் தமிழினம்!
விடியல் காணட்டும் தமிழ் தேசம்!