’சமல் ராஜபக்ஷ ஜனாதிபதியாகியிருக்க வேண்டும்’ !!
ராஜபக்ஷக்களின் குடும்பத்திலிருந்து இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, இந்நாட்டின் ஜனாதிபதியாக வந்திருந்தால், விவசாயிகள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்திருக்க மாட்டார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையைிலான நேற்றைய (25) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளராக ராஜபக்ஷக்களின் குடும்ப உறுப்பினர் ஒருவரே வருவார் என்பது தெரிந்து, ஜனாதிபதி வேட்பாளராக ராஜபக்ஷக்களின் குடும்பத்திலிருந்து சமல் ராஜபக்ஷ வரவேண்டும் என்கிற விருப்பதை நான் உங்களிடம் (சமல் ராஜபக்ஷ) கூறியிருந்தேன் என்றார்.
நீங்கள் (சமல் ராஜபக்ஷ) ஜனாதிபதியாக வந்திருந்தால் தற்போது விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. ராஜபக்ஷக்களின் அண்ணணாக, விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் உங்களின் தம்பியான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறுங்கள் என்று அண்மையில் கூறியிருந்தேன்.
தற்போது விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் சமல் ராஜபக்ஷவாகவே இருக்க முடியும் எனவும் தெரிவித்தார்.