இந்தியா-மியான்மர் எல்லையில் கடும் நிலநடுக்கம்…!!!!
இந்தியா-மியான்மர் எல்லையில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருந்தது.
வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து 174 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக சிட்டகாங் மட்டுமின்றி இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் அதிர்வு ஏற்பட்டது. கொல்கத்தா, கவுகாத்தியில் 30 வினாடிகள் வரை அதிர்வு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். எனினும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.