;
Athirady Tamil News

யாழில் பொலிசாருக்கு உதவி தேவைப்படுமிடத்து இராணுவம் களமிறங்கும்! யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி.!!

0

மாவீரர் தினமாகிய இன்றைய தினம் பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே யாழில் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
இன்று கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் வறுமைக்கோட்டுக்கு ட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வில்
ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது ஏன் என வினவியதற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

இன்றைய மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ் நகரில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது இராணுவத்தின் கடமையாகும் அதனை இராணுவத்தினராகிய நாம் மேற்கொண்டுள்ளோம் எந்த சூழ்நிலையிலும் நாட்டினுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு இராணுவத்தினராகிய நாங்கள் முன்னின்று செயற்படுவோம்
அதனடிப்படையில் தற்போது பொலீசாருக்கு உதவும் முகமாகவே இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

சட்டம் ஒழுங்கினை பொலிசார் நிலைநிறுத்துவதற்கு செயற்படுகிறார்கள்
அவர்களுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு தேவைப்படுமிடத்து இராணுவத்தினரும் களமிறக்க படுவார்கள் என தெரிவித்தார்
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.