தேயிலை பயிர்ச்செய்கையின் தரத்தில் பாரிய பாதிப்பு!!
இரசாயன உரங்களுக்கு விதிக்கப்பட்ட தடையினால் தேயிலை பயிர்ச்செய்கையின் தரத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தானும் ஒப்புக்கொள்வதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
“தேயிலை விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தேயிலையின் தரத்தில் பிரச்சினை உள்ளது. அதை நாம் ஏற்க வேண்டும். பிப்ரவரி மாதத்திற்குள் நிவாரண விலையில் உரத்தினை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.